Datasets:
image
imagewidth (px) 1k
1.92k
| text
stringlengths 14
2k
|
---|---|
விக்கிப்பீடியா மொழிகள் |
|
கட்டடக்கலை என்பது கட்டடங்கள் மற்றும் அதன் உடல் கட்டமைப்புகளை வடிவமைத்தல், செயல்முறைத் திட்டமிடல், மற்றும் கட்டடங்கள் கட்டுவதை உள்ளடக்கியதாகும். கட்டடக்கலை படைப்புகள், கட்டடங்கள் பொருள் வடிவம், பெரும்பாலும் கலாச்சார சின்னங்களாக மற்றும் கலை படைப்புகளாக காணப்படுகின்றது. வரலாற்று நாகரிகங்கள் பெரும்பாலும் அவர்களின் கட்டடக்கலை சாதனைகளின் மூலம் அடையாளம் காணப்படுகின்றன.
ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டடக்கலைக்குள் அடக்கும்.
மேற்படி விடயத்தில், தற்போது கிடைக்கும் மிகப் பழைய ஆக்கம், பொ.ஊ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோமானியக் கட்டடக் கலைஞரான விட்ருவியஸ் என்பாரது "கட்டடக்கலை தொடர்பில்", என்ற நூலாகும். இவரது கூற்றுப்படி, நல்ல கட்டடம், அழகு, உறுதி, பயன்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும். மேற்படி மூன்றும், ஒன்றின்மீதொன்று அளவுமீறி ஆதிக்கம் செலுத்தாமல், தங்களிடையே சமனிலையையும், ஒருங்கினைப்பையும் கொண்டிருத்தலே கட்டடக்கலை என்று சொல்லலாம். ஒரு மேலான வரைவிலக்கணம், கட்டடக்கலையைச், செயற்பாட்டு, அழகியல், உளவியல் என்பன தொடர்பான விடயங்களைக் கையாளல் என்ற விதத்தில் நோக்குகிறது. எனினும், இன்னொரு விதத்தில் பார்த்தால், செயற்பாடு என்பது, அழகியல், உளவியல் உட்பட்ட எல்லா அளபுருக்களையும் தன்னுள் அடக்குவதாகக் கொள்ளலாம்.
கட்டடக்கலை, கணிதம், அறிவியல், கலை, தொழினுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம், பொன்றவற்றுடன் தொடர்புள்ள, ஒரு பல்துறைக் களமாகும். விட்ருவியசின் சொற்களில், "கட்டடக்கலையென்பது, வேறுபல அறிவியல் துறைகளிலிருந்து எழுவதும், பெருமளவு, பல்வேறுபட்ட அறிவுத்துறைகளினால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு அறிவியலாகும்: இதன் உதவியைக் கொண்டே பல்வேறு கலைத் துறைகளினதும் விளைவுகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன". மேலும் ஒரு கட்டடக் கலைஞன், இசை, வானியல் முதலிய துறைகளிலும் நல்ல பரிச்சயமுடையவனாயிருக்க வேண்டும் என்பது விட்ருவியசின் கருத்து. தத்துவம் குறிப்பாக விருப்பத்துக்குரியது. உண்மையில், அணுகுமுறை பற்றிக் கருதும்போது, ஒவ்வொரு கட்டடக் கலைஞனதும் தத்துவம் பற்றிக் குறிப்பிடுகிறோம். பகுத்தறிவியம், பட்டறிவியம் |
|
பிரபலமான அல்லது குறிப்பிடத்தக்க கட்டிடங்கள்:
1 கனடா சதுக்கம், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
191 பீச்ட்றீ கோபுரம், அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
30 சென் மேரி அக்ஸ், இலண்டன்
8 கனடா சதுக்கம், இலண்டன்
அல் அக்சா மசூதி, ஜெரூசலம்
அஸ்ரீலி மையம் வட்டக் கோபுரம், தெல்-அவீவ், இஸ்ரேல்
அஸ்ரீலி மையம் முக்கோணக் கோபுரம், தெல்-அவீவ், இஸ்ரேல்
அமெரிக்க வங்கி பிளாசா, அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
சீன வங்கிக் கோபுரம், ஹொங்கொங்
Bauhaus, Dessau, ஜெர்மனி
Bayreuth Festspielhaus, Bayreuth, ஜெர்மனி
Beaulieu Palace, Essex, England, ஐக்கிய இராச்சியம்
பிராண்டென்பேர்க் நுழைவாயில், பெர்லின், ஜெர்மனி
பிருஹதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர், இந்தியா
பி.டி (BT) கோபுரம், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
புக்காரெஸ்ட் Mall, புக்காரெஸ்ட், ருமேனியா
பக்கிங்ஹாம் அரண்மனை, இலண்டன்
புல்குக்சா, வட கியொங்சாங், வட கொரியா
ககுவாஸ் (Caguas) கோபுரம், ககுவாஸ், புவேர்ட்டோ ரிக்கோ
காசா மிலா (Casa Milà), பார்சிலோனா, ஸ்பெயின்
Cathedral of Christ the Saviour , மாஸ்கோ, ரஷ்யா
மத்திய பிளாசா (Central), ஹொங்கொங்
செண்டர் பொயிண்ட் (Centre Point), இலண்டன்
கிறிஸ்லெர் கட்டிடம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
பெருநகர் நுழைவாயில், ராமத்-கன், இஸ்ரேல்
கொலோன் தேவாலயம், கொலோன், ஜெர்மனி
கொலோன் நாடக அரங்கு (Cologne Theater), புவெனஸ் அயர்ஸ், ஆர்ஜெண்டீனா
கொலோசியம், ரோம், இத்தாலி
கொமேர்ஸ்பாங்க் கோபுரம், பிராங்க்பர்ட், ஜெர்மனி
கொன்செர்ட்கெபவ், ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து
கிறிஸ்டல் மாளிகை, இலண்டன், ஐக்கிய இராச்சியம்
சி.என் கோபுரம் (C.N. Tower), டொரான்டோ, ஒண்டாரியோ, கனடா
டி.ஜி வங்கி கட்டிடம் (D.G. Bank Building), பெர்லின், ஜெர்மனி
பாறைக் குவிமாடம், ஜெருசலெம், இஸ்ரேல்
டொங்லின் கோவில், ஜியாங்ஷி, மக்கள் சீனக் குடியரசு
டுபாய் லாண்ட், துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
ஈபெல் கோபுரம், பாரிஸ், பிரான்ஸ்
எமிரேட்ஸ் கோபுரங்கள், துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
எம்பயர் ஸ்டேட் கட்டிடம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
எல் எஸ்கோரியல், ஸ்பெயின்
பிளடிரோன் கட்டிடம் (Flatiron), நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
குளோப் நாடக அரங்கு (Globe |
|
ஒரு கட்டிடக்கலைஞன் அல்லது கட்டிடச்சிற்பி (Architect) என்பவன் கட்டிடத் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டிட நிர்மாண மேற்பார்வை என்பவற்றில் தேர்ச்சி பெற்ற ஒருவனாவான். கட்டிடக்கலையைப் பார்க்கவும். கட்டிடக்கலைஞர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் பொறியியலாளர்களைப்போல உயர்தொழில் வல்லுனர்களாகக் கணிக்கப்படுகிறார்கள். ஒரு கட்டிடக்கலைஞன் பெறக்கூடிய அதி கௌரவம் பிரிட்ஸ்கெர் பரிசு (Pritzker Prize) ஆகும்.
முற்காலத்தில் கட்டிடக்கலைஞர்கள், திட்டமிடல், வடிவமைப்பு, மேற்பார்வை மட்டுமின்றி, தாங்களே முன்னின்று கட்டிடவேலைகளில் ஈடுபட்டார்கள். பழங்காலக் கட்டிடங்களிலே சிற்பவேலைப்பாடுகள் மிக முக்கிய இடத்தை வகித்தபடியால், இவர்களும் சிற்பிகள் என்றே அழைக்கப்பட்டார்கள்.
பல நாடுகளிலே, கட்டிடக்கலைஞர்கள் தொழில்புரிவதற்கு அனுமதி பெற்றிருக்கவேண்டும். தொழில் முறையில், கட்டிடக் கலைஞர் ஒருவரின் தீர்மானங்கள் பொதுப் பாதுகாப்பைப் பாதிக்கக் கூடியவை. அதனால், உயர்நிலைக் கல்வியையும், செய்முறை அனுபவத்தையும் உள்ளடக்கிய சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கும் ஒருவருக்கே கட்டிடக்கலைத் தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதி, பொதுச் சட்டவிதிகளின் கீழ் அமைக்கப்பட்ட தனி அமைப்பொன்றினாலோ அல்லது கட்டிடக்கலைஞர் நிறுவனங்களினாலோ வழங்கப்படுகின்றது. நாட்டுக்கு நாடு இந்த அனுமதிபெறுவதற்கான, வழிமுறைகளும், பயிற்சிகளும், சிற்றளவில் வேறுபடுகின்றன. பல நாடுகளில் "கட்டிடக்கலைஞர்" என்னும் பெயரைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையும் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டு உள்ளது. இந்நாடுகளில், உரிய பயிற்சி பெறாமல் கட்டிடக்கலைஞர் என்று அழைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம்.
குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்கள்
இங்கு தரப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் அவர்களுடைய முக்கியமான வேலைகளின் காலப்பகுதியைத் தழுவி, காலஒழுங்கு அடிப்படையிலும், அக் காலப்பகுதியினுள் அகரமுதல் அடிப்படையிலும் உள்ளது.
கட்டிடக்கலைஞர்களைப் பயிற்றுவிக்கும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்:
பாஹாவுஸ் (Bauhaus), ஜெர்மனி
இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (Ecole des Beaux Arts), பாரிஸ்
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
குடிசார் பொறியியல் (Civil engineering)
அமைப்புப் பொறியியல் (Structural engineering)
கட்டிடக்கலைஞர் சங்கங்கள்
குடிசார் பொறியாளர்
கட்டிடக் |
|
குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்
முற்காலக் கட்டிடக்கலைஞர்கள்
மார்க்கஸ் அக்ரிப்பா
ட்ரலசிய அந்தேமியஸ் (Anthemius of Tralles)
இம்ஹோடெப் (Imhotep)
இக்டினொஸ் (Iktinos)
மிலெட்டஸ் இசிடோர் (Isidore of Miletus)
கல்லிக்கிறேட்டஸ் (Kallikrates)
நெசிக்கிள்ஸ் (Mnesicles)
நிம்ரொட்
விட்ருவியஸ்
விவாஸ்வட்
பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்
ராபர்ட் டி லுஸார்ச்செஸ்
வில்லார்ட் டி ஹொன்னெக்கோர்ட்
பதினைந்தாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்
லியொன் பட்டிஸ்டா அல்பர்ட்டி
டொனாட்டோ பிரமண்டே
பிலிப்போ புருனெலெஸ்ச்சி (Filippo Brunelleschi)
லியொனார்டோ டா வின்சி
மிக்கெலொஸ்ஸோ மிக்கெலொஸ்ஸி (Michelozzo Michelozzi)
பதினாறாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்
கலீஸ்ஸோ அலெஸ்ஸி (Galeazzo Alessi)
பார்த்தொலோமியோ அம்மானத்தி (Bartolomeo Ammanati)
மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி
Philibert de l'Orme
அண்ட்ரியா பல்லாடியோ (Andrea Palladio)
அண்டோனியோ சங்கால்லோ
ரஃபாயேலோ சாண்டி (Raffaello Santi)
சினான்
ஜோர்ஜியோ வசாரி
கியாகோமோ பரோஸ்சி டா விக்னோலா (Giacomo Barozzi da Vignola)
பதினேழாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்
கியான் லொரென்ஸோ பெர்னினி ( Gian Lorenzo Bernini)
பிரான்ஸெஸ்கோ பொரோமினி (Francesco Borromini)
பியெட்ரோ டா கொர்தோனா(Pietro da Cortona)
குவாரினோ குவாரினி (Guarino Guarini)
உஸ்தாத் இஸா (Ustad Isa)
இனிகோ ஜோன்ஸ்
கார்லோ மடேர்னோ
கார்லோ ரைனால்டி (Carlo Rainaldi)
ஜான் வெப் (John Webb)
கிறிஸ்தோபர் ரென் (Christopher Wren)
பதினெட்டாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்
ராபர்ட் ஆடம் (Robert Adam)
கொஸ்மாஸ் டாமியன் ஆசாம் (Cosmas Damian Asam)
எகிட் குயிரின் ஆசாம் (Egid Quirin Asam)
Étienne-Louis Boullée
வில்லியம் சேம்பர்ஸ் (William Chambers)
கிரிஸ்தோஃப் தியென்சென்ஹோபர் (Christof Dienzenhofer)
கிலியன் இக்னாஸ் தியென்சென்ஹோபர் (Kilian Ignaz Dienzenhofer)
ஜோஹான் பெர்ன்ஹார்ட் ஃபிஷர் வொன் ஏர்லாச் (Johann Bernhard Fischer von Erlach)
ஜொஹான் மைக்கேல் ஃபிஷர் (Johann Michael Fischer)
நிக்கொலாஸ் ஹோக்ஸ்மூர் (Nicholas Hawksmoor)
Johann Lukas von Hildebrandt
ஜேம்ஸ் ஹோபன் (James Hoban)
தோமஸ் ஜெஃபர்சன்
ஃபிலிப்போ ஜுவார்ரா (Filippo Juvarra)
வில்லியம் கெண்ட் (William Kent)
|
|
புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன. இவை,
இயற்கை மற்றும் மனிதத் தோற்றப்பாடுகள் தொடர்பிலான இடம்சார் பகுப்பாய்வு, இது பரம்பல் அடிப்படையிலான புவியியல் ஆய்வு;
நிலப்பரப்பு ஆய்வு, இது இடங்களும், நிலப்பகுதிகளும் தொடர்பானது;
மனிதனுக்கும், நிலத்துக்குமான தொடர்பு பற்றிய ஆய்வு;
புவி அறிவியல்கள் தொடர்பான ஆய்வு; என்பனவாகும்.
ஆனால், தற்காலப் புவியியல், எல்லாவற்றையும் ஒருங்கே தழுவிய ஒரு துறை. இது புவியையும் அதிலுள்ள எல்லா மனித மற்றும் இயற்கைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயல்கிறது. எங்கெங்கே பொருள்கள் இருக்கின்றன என்பதை மட்டுமன்றி, அவை எவ்வாறு மாறுகின்றன, எப்படித் தற்போதைய நிலையை அடைந்தன என்பவற்றை அறிவது தற்காலப் புவியியலின் நோக்கமாகும். மனிதனுக்கும், இயற்பு அறிவியலுக்கும் இடையே உள்ள தொடர்பாக அமைவதால், புவியியல் துறையானது, மானிடப் புவியியல், இயற்கைப் புவியியல் (physical geography) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அறிமுகம்
முன்னர் புவியியலாளர்களை, நிலப்பட வரைவாளர்களைப் போலவும், இடப்பெயர்களையும் அவற்றின் எண்ணிக்கைகளையும் ஆய்வு செய்பவர்களைப் போலவுமே மக்கள் நோக்கி வந்தனர். பல புவியியலாளர்கள், புவிப்பரப்பியல், நிலப்பட வரைவியல் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றிருப்பினும், அவர்களின் முதன்மையான பணி அதுவல்ல. புவியியலாளர்கள், தோற்றப்பாடுகள், செயல்முறைகள், அம்சங்கள், மனிதனுக்கும் அவனது சூழலுக்கும் இடையிலான தொடர்புகள் என்பவற்றின் இடம் சார்ந்தனவும், உலகியல் சார்ந்தனவுமான பரம்பல்கள் குறித்து ஆராய்கிறார்கள். வெளியும், இடமும்; பொருளியல், உடல்நலம், காலநிலை, தாவரங்கள், விலங்குகள் என்பவற்றின் மீது தாக்கங்களைக் கொண்டிருப்பதால், புவியியல் ஒரு பலதுறைத் தொடர்பு கொண்ட துறையாக உள்ளது.
புவியியலின் இரண்டு பிரிவுகளுள், மானிடப் புவியியல், பெரும்பாலும் கட்டிடச் சூழல் பற்றியும்; அவற்றை எவ்வாறு மனிதர்கள் உருவாக்குகிறார்கள், நோக்குகிறார்கள், மேலாண்மை செய்கிறார்கள், அவற்றின் மீது செல்வாக்குச் செலுத்துகிறார்கள் என்பது பற்றியும் |
|
இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளை தலைநகரம்வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, மக்கள்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, மக்கள்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம்.
விக்கித் திட்டம் நாடுகள் திட்டமானது தமிழ் விக்கியில் காணப்படும் மற்றும் இனி வரவிருக்கும் நாடுகள் பற்றிய கட்டுரைகள் ஒரு சீர்தரத்துக்குள் கொண்டுவரும் நோக்கில் அமைந்தது.
மேலதிக மூலங்களுக்கு புவியியல் குறிப்புகளைப் பார்க்கவும்.
{| id="toc" border="0"
! :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ
|}
<table border=1 cellpadding=1 cellspacing=0 style="float: right; border-collapse: collapse;">
நாடுவாரியான பட்டியல்
அ
(ஐக்கிய அமெரிக்க நாடுகள்)
ஆ
இ
ஈ
உ
ஊ
எ
ஏ
ஐ
ஒ
ஒல்லாந்து நெதர்லாந்து பார்க்கவும்.
ஓ
க
(முன்னர் ஸயர்)
2
ச
1 (தாய்வான்)
ட
ட்ரினிடாட்டும் டொபாகோவும்
டொங்கா
டொமினிக்கா
டொமினிகன் குடியரசு
டோகோ
த
தாய்வான் (பார் சீனக் குடியரசு1)
தான்ஸானியா
தாஜிக்ஸ்தான்
திமோர் லெஸ்தே (பார் கிழக்குத் திமோர்)
துருக்மெனிஸ்தான்
துவாலு
துனீசியா
தென் கொரியா
தென்னாபிரிக்கா
ந
2
ப
பர்மா (இப்பொழுது மியன்மார்)
(பார் மேற்குக் கரை)
3
ம
6
மேற்கு சமோவா(இப்பொழுது சமோவா)
5
ய
யேமன்
யப்பான்
ர
ரஷ்யா
ருமேனியா
ருவாண்டா
ல
லெய்செஸ்டீன்(Liechtenstein)
வ
4 (Holy See)
ஹ
ஹங்கேரி
ஹைத்தி
ஹொண்டூராஸ்
ஸ
ஸ்பெயின்
சிலவாக்கியா
சிலவேனியா
சாம்பியா
ஸயர் (இப்பொழுது கொங்கோ ஜனநாயகக் குடியரசு)
ஸிம்பாப்வே
ஜ
ஜமேக்கா
ஜிபூட்டி
ஜெர்மனி
ஜோர்தான்
ஜோர்ஜியா
குறிப்புகள்
இங்கு பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளின் நிலைமை / இறைமை பற்றிய விபரங்கள்.
1 சீனக் குடியரசு(தாய்வான்): Political status of Taiwan |
|
கிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) (1451–1506) இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.
எசுப்பானியப் பேரரசின் கத்தோலிக்க பேரரசர்களின் ஆட்சியில் கொலம்பசு நான்கு கடற்பயணங்களை அத்திலாந்திக்கு பெருங்கடலைக் கடந்து மேற்கொண்டுள்ளார். இந்தக் கடற்பயணங்களும் லா எசுப்பானியோலா தீவில் இவர் நிரந்தரக் குடியேற்றம் அமைக்க மேற்கொண்ட முயற்சிகளும் புதிய உலகம் என அழைக்கப்பட்ட அமெரிக்காக்களில் எசுப்பானிய குடியேற்றத்தைத் துவக்கின.
புதிய வணிக வழிகளைக் கண்டறிந்து குடியேற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற மேற்கத்திய பேரரசுவாத போக்கு மற்றும் ஐரோப்பிய இராச்சியங்களிடையேயான பொருளியல்நிலை போட்டியில் கிழக்கத்திய இந்தியாவை எட்ட கொலம்பசு மேற்கில் பயணித்து உலகைச் சுற்றி இந்தியாவை அடைய முன்மொழிந்தார். இதற்கு எசுப்பானிய அரசரின் ஆதரவைப் பெற்ற கொலம்பசு 1492இல் மேற்கில் பயணித்து புதிய உலகத்தை கண்டறிந்தார். பகாமாசு தீவுக்கூட்டங்களில் தாம் பின்னர் சான் சால்வதோர் எனப் பெயரிட்ட தீவில் வந்திறங்கினார். மேலும் மேற்கொண்ட மூன்று கடற்பயணங்களில் கொலம்பசு பெரிய மற்றும் சிறிய அண்டிலிசு தீவுகளையும் வெனிசுவேலா, நடு அமெரிக்காவின் கரிபியக் கடலோரப் பகுதிகளையும் கண்டறிந்து அவற்றை எசுப்பானியப் பேரரசுக்கு உரியதாக உரிமை கோரினார்.
கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் ஐரோப்பியரல்லர்; 11வது நூற்றாண்டிலேயே லீப் எரிக்சன் தலைமையேற்ற நோர்சு குழு வட அமெரிக்காவில் இறங்கியுள்ளது.) இருப்பினும் இவரது கடற்பயணங்களே அமெரிக்காக்களுடனான ஐரோப்பாவின் முதல் நிரந்தர தொடர்பை ஏற்படுத்தியது; இவற்றை அடுத்தே பல நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பியர்களின் நாடுகாணுதல், கைப்பற்றுதல், குடியேற்றவாதம் தொடர்ந்தன. எனவே இவரது கண்டறிதல் தற்கால மேற்கத்திய உலகின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது.
இதுவரை ஐரோப்பியர்கள் கண்டறியாத புதிய கண்டத்தை வந்தடைந்துள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ளாத கொலம்பசு இங்கு வாழ்ந்திருந்த மக்களை இன்டியோசு ("இந்தியர்களுக்கான" எசுப்பானியச் சொல்) என்றே அழைத்தார். அமெரிக்காவில் குடியேற்றப்பகுதிகளுக்கு நிர |
|
இலங்கை, இந்தியாவுக்குத் தெற்கே, இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடாகும்.
{| class="toccolours" border="1" cellpadding="4" style="float: right; margin: 0 0 1em 1em; width: 250px; border-collapse: collapse; font-size: 95%;padding:0.1em"
|-
| colspan="2" style="margin-left: inherit;background:#077cd0; color:white; font-size: 1.5em; text-align:center" | இலங்கை புவியியல்
|-
|புவியியல் ஆள்கூறுகள்
|7 00 வ, 81 00 கி
|-
|பரப்பளவு
|65,610 ச.கிமீ
|-
|நிலப்பரப்பளவு
|64,740 ச.கிமீ
|-
|நீர்ப்பரப்பளவு
|870 ச.கிமீ
|-
|கரையோர நீளம்
|1,340 கிமீ
|-
|நில எல்லைகள்
|0 கிமீ
|-
|}
கடல்சார் உரிமைகள்
தொடர்ச்சியான பகுதியாக (contiguous zone) 24 கடல் மைல் தொலைவையும், கண்டமேடையாக 200 கடல் மைல் தூரத்தையும் கொண்டுள்ளது.கடல்சார் உரிமைகள்:தொடர்ச்சியான பகுதி:
24 கடல் மைல் (nm)
கண்ட மேடை:
200 கடல் மைல் (nm)
பிரத்தியேக பொருளாதார வலயம்:
200 nm
பிரதேச கடல்:
12 nmகாலநிலை:tropical பருவப் பெயர்ச்சிக் காற்று; வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று(டிசம்பரிலிருந்து மார்ச் வரை); தென்மேற் பருவப் பெயர்ச்சிக் காற்று(ஜூனிலிருந்து அக்டோபர் வரை)நிலத்தோற்றம்:பெரும்பாலும் தாழ்வானது, தட்டை முதல் சிற்றளவான ஏற்ற இறக்கங்கள் கொண்டது; மலைகள் தெந் மத்திய பகுதியில்.நிலைப்பட அந்தலைகள்:மிகத் தாழ்ந்த புள்ளி:
இந்து சமுத்திரம் 0 m
அதியுயர் புள்ளி:
பிதுருதலாகலை 2,524 mஇயற்கை வளங்கள்:சுண்ணாம்புக் கல், காரீயம், கனிம மணல்கள், இரத்தினங்கள், பொஸ்பேற்றுகள், களி, நீர் மின்சாரம்நிலப் பயன்பாடு:பயிர்த்தொழில் செய்யத்தக்க நிலம்:
14%
நிலையான பயிர்:
15%
நிலையான புல்வெளிகள்:
7%
காடுகளும் மரச்செறிவுகளும்:
32%
ஏனையவை:
32% (1993 கணக்கீடு)நீர்ப்பாசனமுள்ள நிலங்கள்:5,500 சது. கிமீ(1993 கணக்கீடு)இயற்கை அழிவுகள்:அவ்வப்போது தோன்றும் புயல்களும், சூறாவளிகளும்.சூழல் - தற்காலச் சிக்கல்கள்:காடழிப்பு; மண்ணரிப்பு; சட்டவிரோத வேட்டையினாலும், நகராக்கத்தினாலும், வனவிலங்குகள் ஆபத்துக்குள்ளாகியிருத்தல்; அகழ்வு நடவடிக்கைகளினாலும், அதிகரித்துவரும் மாசடைதலாலும், கரையோர degradation; தொழிற்சாலைக் கழிவுகளாலும், கழிவு நீர் கலத்தலாலும், நன்நீர் வளங்கள் மாசடைதல்; கழிவு அகற்றல்; கொழும்பில் காற்று மாசடைதல்.சுற்றுச்சூழல் - அனைத்துலக ஒப்பந்தங்கள்:'party to:உயிரினப் பன்வகைம |
|
இந்தியத் துணைக் கண்டம் (Indian subcontinent) என்பது ஆசியாவின் தெற்குப் பகுதியாகும். இதைப் பொதுவாக துணைக்கண்டம் என்று அழைப்பார்கள். இத்துணைக்கண்டத்தின் பெரும்பகுதி இந்தியத் தட்டில் அமைந்துள்ளது. இமயமலையில் இருந்து தெற்கு நோக்கி இந்தியப் பெருங்கடலில் துருத்தி பரவியுள்ளது. இந்திய துணைக் கண்டம் கோண்ட்டுவானாவில் இருந்து சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிக்கப்பட்டு யூரேசிய தட்டுடன் இணைந்த நிலப்பகுதியாக இருக்கலாம் என்று நிலவியலில் கருதப்படுகிறது.
புவியியல் ரீதியாக தெற்கு-மத்திய ஆசியாவில் உள்ள ஒரு தீபகற்பப் பிரதேசம் என்று இந்தியத் துணைக்கண்டம் புவியியல்ரீதியாக விளக்கப்படுகிறது. வடக்கில் இமயமலையால் வளைக்கப்பட்டும், மேற்கில் இந்து குஷ் மலைத்தொடரும், கிழக்கில் அரகான் மலைத்தொடரும் இத்தீபகற்பத்தைச் சூழ்ந்துள்ளன. அரசியல் ரீதியாக இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மியன்மார் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தெற்காசியாவின் ஒரு புவியியல் பகுதியாக கருதப்படுகிறது.
சில நேரங்களில் தெற்காசியா என்ற சொல் இந்திய துணைக் கண்டத்தை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. தெற்காசியா, இந்தியா என்ற பாகுபாட்டின் கீழ் ஒவ்வொன்றிலும் எந்த நாடுகள் சேர்க்கப்பட வேண்டும் என்பது பற்றிய ஒருமித்த கருத்து ஏதுமில்லை.
சொற்பிறப்பியல்
தனித்துவமான புவியியல், அரசியல் அல்லது கலாச்சார அடையாளம் கொண்ட ஒரு கண்டத்தின் துணைப்பிரிவு என்றும் ஒரு கண்டத்தைக் காட்டிலும் சற்றே சிறிய நிலப்பகுதி என்றும் ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியில் துணைக் கண்டம் என்ற சொல்லுக்கு பொருள் கூறப்பட்டுள்ளது. தனித்தனி கண்டங்களாக கருதப்படுவதற்கு முன்னர் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவைக் குறிப்பதற்காக 1845 ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்தியத் துணைக்கண்டம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்துதான் இந்திய துணைக் கண்டத்தை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டாதாக அறிய முடிகிறது. பிரித்தானிய இந்தியா மற்றும் பிரித்தானிய வணிகவியல் மேலதிகாரத்தின் கீழ் உள்ள மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா) இரண்டையும் உள்ளடக்கிய பகுதியை குறிப்பிடுவதற்கு இந்தியத் துணைக்கண்டம் என்ற பெயர் மிகவும் வசதியாக இருந்தது.
இந்திய துணைக் கண்டம் என்ற சொல் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. பல்வேறு கண்டங்களைப் ப |
|
கி.மு. 6-ஆம் நூற்றாண்டு (6th century BC) என்பது கி.மு. 600-ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து கி.மு. 501-ஆம் ஆண்டின் கடைசி நாளன்று முடிவடைந்த காலப்பகுதியைக் குறிக்கும்.
இந்நூற்றாண்டில் அல்லது சிறிது காலத்தின் பின்னர் இந்தியாவின் பாணினியில் சமக்கிருத இலக்கணம் எழுதப்பட்டது.
பாபிலோனியப் படைகள் எருசலேமைக் கைப்பற்றின. பாபிலோனியர்களின் ஆட்சி பின்னர் 540களில் பேரரசர் சைரசுவினால் கவிழ்க்கப்பட்டு, அகாமனிசியப் பேரரசு உருவாக்கப்பட்டது. பாரசீக இராச்சியம் விரிவாக்கப்பட்டது.
இரும்புக் காலத்தில், கெல்ட்டியர் விரிவு இடம்பெற்றது.
நிகழ்வுகள்
பாரசீகர் பண்டைய எகிப்தைக் கைப்பற்றினார்கள், கிழக்கு நடுநிலக் கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
கார்த்தேசுவின் வணிக இராச்சியம் சிறிது சிறிதாக மேற்கு நடுநிலக் கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
உரோமக் குடியரசு உருவாக்கப்பட்டது.
யூதா இராச்சியத்தின் அழிவும், முதல் யெருசலேம் கோயிலின் அழிவும் (கிமு 586), பல தசாப்தங்களுக்குப் பின்னர் யூதர்கள் திரும்பிவருதல்.
புத்தர், இந்தியாவில் பௌத்த சமயத்தை உருவாக்கினார்.
கன்பூசியஸ், கன்பூசியம் என அழைக்கப்படும் நீதிநூல் முறைமையை உருவாக்கினார், இது சீனாவில் பெரும் செல்வாக்குப் பெற்றது.
குறிப்பிடத்தக்கவர்கள்
புத்தர்
கன்பூசியஸ்
மஹா சைரஸ் - பாரசீகத்தின் அரசன்
தாலெஸ் (Thales) கிரேக்கக் கணிதர். கிரகணமொன்றை எதிர்வுகூறினார்.
பைதகரஸ், கிரேக்கக் கணிதர். பைதகரசின் தேற்றம் பார்க்க.
மகாவீரர், 24வது தீர்த்தங்கரர், (கிமு 599–கிமு 527)
கிமு 563 — புத்தரின் தாய் மாயா இறப்பு
சுன் சூ, போர்க்கலை நூலாசிரியர்
லாவோ சீ
புத்தாக்கங்கள், கண்டுபிடிப்புக்கள், அறிமுகப்படுத்தல்கள்
மேற்கோள்கள்
நூற்றாண்டுகள்
கிமு 6-ஆம் நூற்றாண்டு |
|
அனுராதபுரம் (Anuradhapura) இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தற்காலத்தில் இது நாட்டின் வடமத்திய மாகாணத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். சிங்களவரின் வரலாற்று நூலான மகாவம்சத்தின்படி, வடகிழக்கு இந்தியாவிலிருந்த லாட தேசத்திலிருந்து, அவனுடைய துர்நடத்தை காரணமாக, 700 நண்பர்களுடன் சேர்த்துத் துரத்திவிடப்பட்ட விஜயன் என்ற இளவரசன் இலங்கை வந்தபோது அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றமாகும். ஆரம்பத்தில் அனுராதகிராமம் என அழைக்கப்பட்டது. கி.மு. 437-கி.மு. 367 வரையான காலப்பகுதியில் (சிலரின் கருத்துப்படி கி.மு. 337-கி.மு. 305) இலங்கையை ஆண்ட பண்டுகாபயன் என்ற அரசன் அனுராத கிராமத்தை அனுராதபுரமாக மாற்றி அவனது தலைநகராக்கினான். இதன் பின்னர், 10ஆம் நூற்றாண்டளவில், தென்னிந்திய படையெடுப்புகள் காரணமாக தலைநகர் பொலன்னறுவைக்கு மாற்றப்படும் வரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் தலைநகராக இருந்துவந்தது. தற்போதும் கூட இலங்கையில் உள்ள மாவட்டங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் அனுராதபுரமே.
மக்கள்தொகையியல்
மூலம்: www.statistics.gov.lk - கணக்கெடுப்பு ஆண்டு 2001
ஸ்ரீ மகா போதி
இலங்கையில் புத்த சமயத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த பிக்குணியாக இருந்த தன்னுடய மகளான சங்கமித்தை மூலம் அனுப்பிய, புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்று, அனுராதபுரத்திலேயே நடப்பட்டது. தற்பொழுது உலகின் மிகப் பழைய மரங்களிலொன்றாகக் கருதப்படும் இம் மரம், பௌத்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இன்னும் இருந்து வருகிறது.
நீர்ப்பாசனம்
இந்த நகரைச் சுற்றி, 5 பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் மிகப் பழைய காலம் முதலே இருந்து வருகின்றன. அனுராதபுரத்திலே வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் உணவுத்தேவைகளுக்காக, சுற்றியுள்ள பரந்த பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்கு இக் குளங்கள் பயன்பட்டன. சுமார் 2500 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் குளங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. நகருக்கு அணித்தாக அதனைச் சுற்றிப் பல பாரிய பௌத்த விகாரைகளும் இருந்தன.
மீள் கண்டுபிடிப்பு
கைவிடப்பட்ட பின்னர், பாழடைந்து, காடடர்ந்து, மறக்கப்பட்டுக் கிடந்த இப் பண்டைய நகரின் அழிபாடுகள், 20ஆம் நூற்றாண்டி |
|
இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. உலகில் பரப்பளவு அடிப்படையில் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும். இதற்குத் தெற்கே இந்தியப் பெருங்கடலும், தென் மேற்கே அரபிக்கடலும், தென் கிழக்கே வங்காள விரிகுடாவும் சூழ்ந்துள்ளன. மேற்கே பாக்கித்தான், வடக்கே சீனா, நேபாளம், மற்றும் பூட்டான், கிழக்கே வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகியவற்றுடன் நில எல்லைகளை இது பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு அருகில் இந்தியா அமைந்துள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளானவை தாய்லாந்து, மியான்மர் மற்றும் இந்தோனேசியாவுடன் ஒரு கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியத் துணைக்கண்டத்திற்கு குறைந்தது 55,000 ஆண்டுகளுக்கு முன்னரே வந்தனர். தொடக்கத்தில் தனிமைப்படுத்தப்பட்டதன் வேறுபட்ட வடிவங்களில் வேட்டையாடி-சேகரித்து உண்பவர்களாக இவர்கள் நீண்ட காலமாக ஆக்கிரமித்து இருந்தனர். இது இப்பகுதியை மரபணு ரீதியில் மிக அதிக வேற்றுமைகளை உடையதாக ஆக்கியுள்ளது. மனித மரபியற் பல்வகைமையில் ஆப்பிரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இதன் காரணமாக இந்தியா உள்ளது. துணைக்கண்டத்தில் குடியமர்ந்த வாழ்வானது 9,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து ஆற்று வடிநிலத்தின் மேற்கு எல்லைகளில் தோன்றியது. படிப்படியாக பரிணாமம் அடைந்த இது சிந்துவெளி நாகரிகமாகப் பொ. ஊ. மு. 3வது ஆயிரம் ஆண்டில் உருவாகியது. பொ. ஊ. மு. 1,200 வாக்கில் ஓர் இந்தோ-ஐரோப்பிய மொழியான சமசுகிருதத்தின் தற்போது வழக்கில் இல்லாத வடிவமானது வடமேற்கில் இருந்து இந்தியாவுக்குள் பரவியது. இதற்கான ஆதாரமானது இந்நாட்களில் இருக்கு வேதத்தின் சமயப் பாடல்களில் காணப்படுகிறது. மன உறுதியுடன் கவனமாக மனப்பாடம் செய்யப்பட்ட வாய் வழிப் பாரம்பரியத்தால் இது பாதுகாக்கப்பட்டு இருந்தது. இந்தியாவில் இந்து சமயத்தின் தோற்றத்தை இருக்கு வேதமானது பதிவிடுகிறது. இதனால் இந்தியாவில் திராவிட மொழிகளானவை வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இடமாற்றம் செய்யப்பட்டன. பொ. ஊ. மு. 400 வாக்கில் சாதியால் படி நிலை அமைப்பு மற்றும் விலக்கலானது இந்து சமயத்திற்குள் உருவாகத் |
|
யாழ்ப்பாணம் (Jaffna) என்ற சொல் குறிக்கும் பொருள்கள் பற்றிய தனித்தனியான விபரங்களை அறிய கீழே பொருத்தமானவற்றைத் தெரியுங்கள்.
யாழ்ப்பாணம், யாழ்ப்பாண நகரம்
யாழ்ப்பாண மாவட்டம்
யாழ்ப்பாணக் குடாநாடு
யாழ்ப்பாணம் (வானூர்தி)
வரலாறு
யாழ்ப்பாண அரசு
யாழ்ப்பாண வரலாறு
யாழ்ப்பாண இராசதானி
நிருவாகம்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
யாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள்
யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்
யாழ்ப்பாண மாநகரசபை
நூல்கள்
யாழ்ப்பாண வைபவமாலை
யாழ்ப்பாண வைபவ கௌமுதி
வேறு
யாழ்ப்பாணக் கோட்டை
யாழ்ப்பாணக் கடல் நீரேரி
புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர்
யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் |
|
வரலாறு (history, கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: "ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு") என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது . எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அனைத்தும் வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. இத்தலைப்பின்கீழ் கடந்த கால நிகழ்வுகள், நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை அனைத்தும் இடம் பெறுகின்றன. வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்கின்ற அறிஞர்கள் வரலாற்று அறிஞர்கள் எனப்படுகின்றனர்.
வரலாறு ஒரு பாடப் பிரிவாகக் கருதப்படுவது மட்டுமின்றி கடந்த கால நிகழ்வுகளின் வரிசை முறையை ஆய்வு செய்வதற்கும், அவற்றை விளக்குகின்ற ஒரு விரிவுரையாகவும் பயன்படுகிறது. கடந்தகால நிகழ்வுகளுக்கான காரணங்களையும், விளைவுகளையும் உய்த்துணரவும் அவற்றை உறுதிப்படுத்தவும் வரலாறு பயன்படுகிறது .
வரலாற்று வல்லுநர்கள் சில நேரங்களில் வரலாற்றின் இயல்பு மற்றும் அதன் பயன்பாடு பற்றி விவாதித்ததன் மூலம், வரலாறு என்பதற்கு அதுவே ஒரு முடிவு என்றும், தற்போதுள்ள பிரச்சினைகளைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகவும் வரலாற்றைக் கருதுகின்றனர்.
வெளிப்புற ஆதாரங்கள் ஏதுமில்லாத ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குரிய ஆர்தர் அரசனைச் சேர்ந்த கதைகள் போன்ற சில பொதுவான கதைகள் வழக்கமாக கலாச்சார பாரம்பரியங்கள் அல்லது புனைவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன, ஏனென்றால் வரலாற்றின் ஒழுங்குமுறை இலக்கணத்திற்குத் தேவையான தேடல் இல்லாமல் அவை உள்ளன . மேற்கத்திய பாரம்பரியத்தில் இரோட்டோடசு என்ற 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வரலாற்று வல்லுநர் வரலாற்றின் தந்தை என்று கருதப்படுகிறார். மேலும் சமகால வரலாற்று வல்லுநரான ஏதென்சின் துசைடைட்சும் இவரும் சேர்ந்து மனித வரலாற்றின் நவீன ஆய்வுக்கான அடித்தளங்களை உருவாக்க உதவினர். இவ்விருவரின் படைப்புக்கள் யாவும் இன்றும் வாசிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கலாச்சாரம் சார்ந்த இரோட்டோடசுக்கும், இராணுவத் தளமான துசைடைட்சுக்கும் இடையேயான இடைவெளி நவீன வரலாற்று எழுத்துக்களின் கருத்துக்கு அல்லது அணுகுமுறைக்கு ஒரு முக்கியமான புள்ளியாக உள்ளது. ஆசியாவில், சிபிரிங் அண்டு ஆட்டம் ஆனல்சு என்ற வரலாற்று கலைக்களஞ்சியம் கி.மு. 722 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக் |
|
பொறியியல் (Engineering) என்பது கட்டமைப்புகள், எந்திரங்கள், பொருட்கள், ஏற்பாடுகள் (கருவிகள்), அமைப்புகள், செயல்முறைகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் புத்தாக்கம், வடிவமைப்பு, கட்டுமானம், இயக்குதலும் பேணுதலும் சார்ந்த செயல்பாடுகளுக்கு அறிவியல், கணிதவியல் முறைகள், பட்டறிவு சான்று ஆகியவற்றின் முறையியலைப் பயன்படுத்தும் ஆக்கநிலைச் செயல்பாடாகும். பொறியியல் துறை அல்லது திணைக்களம் அகல்விரிவான பொறியியல் துறைகளைக் கொண்ட தொகுப்பாகும். இவற்றின் ஒவ்வொரு பொறியற் புலம் தனக்கே உரிய களங்களில் பொறியியல் சார்ந்த் மேற்கூறிய முறையியலைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன.
பொறியியல் எனும் சொல், இலத்தீன மொழிச் சொல்லான ingenium என்ற வேர்ச்சொல்லில் (கிபி1250) இருந்து வந்தது. இதன் பொருள் " தந்திரம் அல்லது மதிநுட்பம்" என்பதாகும். மேலும் ingeniare எனும் இலத்தின மொழி வினைச்சொல்லின் பொருள் "புனை(வி), ஏற்படுத்து(வி)" என்பதாகும்.
எனவே, பொறியியல் அறிவியல், கணிதவியல்]] கோட்பாடுகளைத் திறமுடன் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற்பாட்டுக் கலையாகும். இது இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய அறிவியற்துறைகளையும், அவற்றின் சிறப்புத் துறைகளான பொருள் அறிவியல்(materials science), திண்ம / பாய்ம இயக்கவியல் (Solid/Fluid Mechanics), வெப்ப இயக்கவியல் (Thermodynamics) போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர். பொறியாளர்கள் ஆற்றல், பொருட்கள் எனும் இருவகை இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்றனர்.
பொருட்களின் பயன்பாடு அவற்றின் தாங்கு திறன், முறைப்படுத்த உகந்ததாயிருத்தல், எடை குறைவாயிருத்தல், நெடுங்காலம் சிதையாதிருத்தல், கடத்து திறன், வேதியியல், ஒலியியல், மின்னியல் பண்புகள் போன்ற பற்பல தன்மைகளைப் பொருத்து இருக்கும். ஆற்றலுக்கான முக்கிய மூலங்கள், தொல்படிவ எரிபொருட்கள்(Fossil Fuels) (பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை வளிமம், காற்று, சூரியன், நீர்வீழ்ச்சி, அணுக்கருப் பிளவு போன்றவை.
வரையறை
பொறியியல், தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கும் வாரியத்துக்கு) (ABET) முன்பு அப்பணியை நிறைவேற்றிய அமெரிக்கத் தொழில்முறை வளர்ச்சி மன்றம் (ECPD) "பொறியியல்" புலத்தைப் பின்வருமாறு வரையறுக்கிறது:
பொறியியல் என்பது கட்டமைப்புகளையும் எந்திரங்களையும் ஆய்கருவிகளையு |
|
எமிரேட்ஸ் கோபுரங்கள் என அழைக்கப்படும் இரட்டைக் கோபுரங்கள், டுபாயிலுள்ள, ஷேக் ஸயத் வீதி என்று பெயரிடப்பட்டுள்ள, துபாய் - அபுதாபி பெருந்தெருவை அண்டி அமைந்துள்ளது. முக்கோணவடிவ வெட்டுமுகத்தையுடைய இவ்விரு கோபுரங்களிலொன்று மற்றதிலும் சிறிது உயரமானது. இக் கட்டிடத்தின் கீழ்த் தளங்கள், பரந்த ஒரு podium ஆக அமைந்து மேற்படி இரு கோபுரங்களையும் தாங்குவது போலுள்ளது.
56 மாடிகளைக் கொண்ட, 355 மீட்டர் உயரமான பெரிய கோபுரம், பெரும்பாலும் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. 54 மாடியையும், 309 மீட்டர் உயரத்தையும் கொண்ட சிறிய கோபுரம், 500 அறைகளைக் கொண்ட ஒரு ஐந்து நட்சத்திர தங்குவிடுதி (Hotel) ஆக அமைந்துள்ளது. இணைப்பு மேடைபோலமைந்துள்ள கீழ் ஐந்து தளங்களிலும், உணவுச்சாலைகள், அங்காடிகள் மற்றும் வாகனத் தரிப்பிடங்கள் என்பன அமைந்துள்ளன.
இக் கட்டிடம், கிடைக்கக்கூடிய அதி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது 2000 ஆவது ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட போது, மத்திய கிழக்கின் அதியுயர்ந்த கட்டிடமாகவும், உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்பதாவது இடத்திலும் இருந்தது.
இது நோர் குரூப் (Norr Group) கட்டிட ஆலோசனை நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
வானளாவிகள் |
|
கோலம் (, , ) என்பது முகு (), தரை அலகங்காரம் மற்றும் ரங்கோலி () என்பது வீட்டு வாயில்களில் அல்லது வாசலில் அரிசி மாவு அல்லது வேறு பொடிகளைப் பயன்படுத்தி பெண்களால் வரையப்படும் வடிவங்கள் ஆகும். கோலத்தின் பிறப்பிடம் தமிழகம் ஆகும். பழங்கால தமிழ்நாட்டிற்கு சொந்தமானது, இந்த கலை. இக்கலை பின்னர் மற்ற தென்னிந்திய மாநிலங்களான கருநாடகம், தெலங்காணா, ஆந்திரா மற்றும் கேரளாவிற்கும் பரவியுள்ளது. கோவா மற்றும் மகாராட்டிராவின் சில பகுதிகளிளும் கோலமிடுவதை இன்றும் காணலாம். புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் இருப்பதால், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் சில ஆசிய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் கோலம் போடும் வழக்கம் காணப்படுகிறது. கோலம் அல்லது முகு என்பது நேர்கோடுகள், வளைவுகள் மற்றும் சுழல்களால் ஆன ஒரு வடிவியல் கோட்பாட்டு வரைதல் ஆகும். இது புள்ளிகளின் கட்ட வடிவத்தைச் சுற்றி வரையப்படுகிறது. ஆண்களும் சிறுவர்களும் கூட இந்த பாரம்பரியத்தை கடைப்பிடித்தாலும், பெண்களால் தங்கள் வீட்டு நுழைவாயிலுக்கு முன்னால் பரவலாகப் வரையப்படுகிறது. கோலத்தின் பிராந்திய மாறுப்பாடுகள் இவற்றின் தனித்துவமான வடிவங்களுடன் இந்தியாவில் வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன: மகாராட்டிராவில், என [[மிதிலா (இந்தியா)|மிதிலாவிலும்] ], மேற்கு வங்கத்தில் அல்போனா என்றும் கருநாடகாவில் கன்னடத்தில் ஹசே மற்றும் ரங்கோலி என்றும் அழைக்கப்படுகிறது. திருவிழா நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது மிகவும் சிக்கலான, சிறப்பான கோலங்கள் வரையப்பட்டு வண்ணங்கள் பலச் சேர்க்கப்படுகின்றன.
கோலமிடுவதற்கான பொருட்களும், முறையும்
தமிழ்நாடு, இலங்கை போன்ற இடங்களில், கோலங்கள் அரிசிமாவு, முருகைக்கற்பொடி போன்ற வெண்ணிற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன. பொதுவாக வெளியே தளர்வான மண்தரையாயின், நீர் தெளித்துப் புழுதி அடக்கப்படும். பின்னர் பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து, விரல்கள் நிலத்தில் படாமல், நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்து, ஏற்கனவே எண்ணியபடியான வடிவம் கிடைக்கும் வகையில், பொடியைத் தூவிச் செல்வார்கள். பசுச் சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவதாயின், சிலவேளைகளில் அரிசியை நீர்விட்டுப் பசைபோல் அரைத்துப் பின்னர |
|
வானியல் (Astronomy) என்பது விண்பொருட்கள் (அதாவது இயற்கைத் துணைக்கோள்கள், கோள்கள், விண்மீன்கள், விண்முகில்கள் மற்றும் விண்மீன் பேரடைகள்) பற்றியும், அவற்றின் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் படிப்படியான வளர்ச்சி பற்றியும், மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை (உ-ம்: மீயொளிர் விண்மீன் வெடிப்பு, காமா கதிர் வெடிப்பு, விண்-நுண்ணலை-பின்புலம் (Cosmic microwave background) போன்றவற்றை) அவதானிப்பதிலும், விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும். வானியலுடன் தொடர்புடைய, ஆனாலும் முற்றிலும் தனித்துவமான துறையான அண்டவியல் என்பது அண்டத்தைப் பற்றி முழுமையாக ஆய்வதாகும்.
வானியல் என்பது வரலாற்றில் மிகவும் பழமையான அறிவியல் துறைகளில் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய நாகரிகங்களின், அதாவது எகிப்து மற்றும் நுபிய நாகரிக நினைவுச் சின்னங்கள் அவர்களின் வானியல் அறிவைப் பறைசாற்றுகின்றன. மேலும், ஆரம்பகால நாகரிகங்களான பபிலோனிய, கிரேக்க, இந்திய, ஈரானிய, சீன மற்றும் மாயன் நாகரிகங்களில் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் விண்வெளியை அவதானித்துக்குறிப்புகள் எடுப்பது வழக்கமாயிருந்தது. ஆனாலும், ஒரு தனித்துவமான அறிவியல் துறையாக வளருவதற்கு தொலைநோக்கியின் கண்டுபிடிப்பு இன்றியமையாததாக இருந்தது; அதன் பயன்பாடு ஆரம்பித்த பின்னரே வானியல் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. வரலாற்று பூர்வமாக வானியல் பல உட்பிரிவுகளையும், துறைகளையும் கொண்டிருந்தது; வான்பொருளியக்க அளவியல் (Astrometry), விண்-தெரிமுறை செலுத்துநெறி (Celestial Navigation), அவதானிப்பு வானியல் மற்றும் நாட்காட்டி தயாரித்தல் போன்றவை. வானியல் பெரிதும், வானியற்பியலுடன் தொடர்புபட்டது. தற்காலத்தில், தொழில்முறை வானியல் என்பது வானியற்பியலையே குறிக்கின்றது.
20-ஆம் நூற்றாண்டில், வானியல் அவதானிப்பு வானியல் மற்றும் கருத்தியல் வானியல் என்று இரு-துறைகளாகப் பிரிந்தது. விண்பொருட்களை அவதானித்து, தரவுகள் சேகரித்து, அவற்றை இயற்பியல் முறைகளால் பகுத்தாய்வது அவதானிப்பு வானியல் ஆகும். விண்பொருட்கள் மற்றும் நிகழ்வுகளை, கணினி மற்றும் கணக்கீட்டு மாதிரிகள் கொண்டு விளக்க முற்படுவது கருத்தியல் வானியல் ஆகும். இவ்விரு துறைகளும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. கருத்தியல் கோட்பாடுகளை விளக்க அவதானிப்புகளும், அவதானிப்பு நிகழ்வுகளை விளக்கக்கருத்திய |
|
இசுப்புட்னிக் 1 (Sputnik 1) பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட மனிதனால் செய்யப்பட்ட முதலாவது செயற்கைக் கோள் ஆகும். இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இச் செயற்கைக்கோளின் நிறை 83 கிகி (184 இறாத்தல்) ஆகும். இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்த இச்செயற்கைக்கோள் பூமிக்குமேல் 250 கிமீ (150 மைல்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. இசுப்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. இசுப்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.
இசுப்புட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றில் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்றது. இதுவும், விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது. ஸ்புட்னிக் 1 ஜனவரி 4, 1958ல் மீண்டும் பூமியில் விழுந்தது.
மேற்கோள்கள்
இசுப்புட்னிக் திட்டம் |
|
திரைப்படம் (Film) அல்லது நகரும் படம் (Motion Picture) என்பது அனுபவங்களை உருவகப்படுத்தி, யோசனைகள், கதைகள், உணர்வுகள், அழகு அல்லது சூழ்நிலையைப் பயன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தும் காட்சிக் கலைப் பணியாகும். இந்தப் படங்கள் பொதுவாக ஒலியுடனும் மிகவும் அரிதாக, பிற உணர்ச்சி தூண்டுதல்களுடன் இருக்கும்.
திரைப்படம் ஆக்கம் செய்யும் முறையானது ஒரு கலையாகவும், ஒரு தொழிற்துறையாகவும் விளங்குகிறது. திரைப்படங்கள் பொதுவாக ஒளிப்படலங்களில் பதியப்பட்டு, பின் அதனை ஒளிப்படப் பெருக்கியின் மூலம் திரையின் மீது பெரிய அளவிலான படமாக காட்சிப்படுத்துவர். தற்காலத்தில் எண்முறை ஒளிப்படலங்களாக வன்வட்டிலோ அல்லது பளிச்சுவட்டிலோ ரெட் ஒன் ஒளிப்படக்கருவியின் உதவியால் காட்சிகளைப் பதியப்படுகிறது.
திரைப்படம், பொதுவாக பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்பட்டு முன்னர் திரையரங்குகளின் திரைகளில் காண்பிக்கப்பட்டு, இப்பொழுது திரையரங்குகள் தவிர தொலைக்காட்சி, குறுந்தட்டு, பேழை, இணையம் போன்ற ஊடகங்கள் மூலமும் வினியோகிக்கப்படும் நகரும் படங்களையும், அப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள துறையையும் குறிக்கும் சொல்லாகும்.
திரைப்படங்கள் பெரும்பாலும் பின்னணி இசை, உரையாடல்கள் மற்றும் பாடல்களுடன் காணப்படும். அவ்வகையான ஒலிப்படலம் திரையில் காணப்படும் ஒளிப்படத்திற்கு ஏற்றார் போன்று அமைந்திருக்கும். படச்சுருளுக்குள் ஒரு பகுதியில் உள்ளதாகவும், திரையில் காட்சிப்படுத்தப்படாத ஒரு பகுதியாகவும் இது அமைந்திருக்கும்.
வரலாறு
ஒளிப்படம் எடுக்கும் முறையினை 1830ஆம் ஆண்டில் கண்டறிந்த பிறகு, எட்வர்ட் மைபிரிட்ஷ் என்னும் ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையின் அசைவுகளை இயக்கப்படமாக எடுத்து வெற்றி கண்டார். அதன்பின், ஈஸ்ட்மென் என்பவர் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார். ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்க, அமெரிக்க அறிஞர் பிரான்சிஸ் சென்கின்ஸ் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படமொன்றைப் பலரும் காணும்வகையில் வடிவமைத்துக் காட்டினார். இதுவே, புதிய படவீழ்த்திகள் உருவாக அடிப்படையாக அமைந்தது. பிரான்சிஸ் உருவாக்கிய இவ்வியக்கப் படத்தில் நாட்டியம், கடல் அலைகள் கரையில் மோதும் காட்சிகள் முதலியன காணப்பட்டது. மேலும், இவையனைத்தும் ஊமைப் படங்களாக அமையப்பெற்றன. இவற்றை மக்களிடையே காண்பித்து கட்டணம் பெறப்பட்டது.
இந்தியா, சீனா |
|
தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் என்பது தமிழ்நாடு, சென்னையில் உள்ள தமிழகத் திரைப்படத்துறையில் ("கோலிவுட்") முன்பு
பணியாற்றிய அல்லது தற்போது பணியாற்றி வரும் பிரபல முன்னணி திரைப்பட நடிகர்களின் பெயர்களை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு குறைந்தது ஐந்து படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் மட்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1930கள்
1940கள்
1950கள்
1960கள்
1970கள்
1980கள்
1990கள்
2000கள்
1950க்கு முன்பு
1950கள்
1970கள்
1980கள்
1980கள்
1990கள்
2000ம் ஆண்டிற்கு பின்பு
மேற்கோள்கள் |
|
{{Infobox person
| name = சிவாஜி கணேசன்
| image = SivajiGanesan 19620824.jpg
| imagesize = 230px
| caption = சிவாஜி கணேசன், 1962 ஆகத்து 24 பிலிம்பேரில் வெளியானது
| birth_name = விழுப்புரம் சின்னையா மன்ராயா்.கணேசமூர்த்தி (வி.சி.கணேசன்)
| birth_date =
| birth_place = விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா
| death_date =
| death_place = சென்னை, தமிழ்நாடு, இந்தியா
| awards = கலைமாமணி விருதுபத்ம ஸ்ரீபத்ம பூசன்தாதாசாஹெப் பால்கே விருதுஎன். டி. ஆர் தேசிய விருதுசெவாலியர் விருது
| othername = நடிகர் திலகம், சிம்மக்குரலோன்| yearsactive = 1952 – 1999
| spouse = கமலா கணேசன்
| children = சாந்திஇராம்குமார் பிரபு தேன்மொழி
| parents = தந்தை: சின்னையா மன்ராயா்தாயாா்: ராஜாமணி அம்மாள்
| relatives = உடன்பிறந்தோா் :- வி. சி. திருஞானசம்பந்தர்வி. சி. கனகசபைநாதன்வி. சி. தங்கவேல்வி. சி. சண்முகம்வி. சி. பத்மாவதி.வேணுகோபால்பேரன்கள்:விக்ரம் பிரபுதுஷ்யந்த்
| nationality = இந்தியர்
| religion = இந்து
}}சிவாஜி கணேசன் (Sivaji Ganesan, 1 அக்டோபர் 1928 – 21 சூலை 2001) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி' ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.
நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே இருந்தது. நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர், நடிப்பு பல்கலைக்கழகம் என்றும் போற்றப்படுகிறார். சரித்திரம், புராணம் , குடும்பம், சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபா |
|
ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், UAE ), சுருக்கமாக அமீரகம் அல்லது எமிரேட்சு என்பது பாரசீக வளைகுடாவில் அராபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்கே ஓமான், தெற்கே சவூதி அரேபியா ஆகிய நாடுகளும், உள்ளன. கத்தார், ஈரான் ஆகியவை கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. 2013 ஆம் ஆன்டில் இதன் மக்கள்தொகை 9.2 மில்லியன்கள் ஆகும். இவர்களில் 1.4 மில். பேர் அமீரகத்தினரும், 7.8 மில்லியன் பேர் வெளிநாட்டினரும் ஆவார்.
1971 டிசம்பரில் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று நிறுவப்பட்ட இந்நாடு அபுதாபி (தலைநகரமாக செயல்படுகிறது), அஜ்மான், துபாய், புஜைரா, ரஃஸ் அல்-கைமா, சார்ஜா, உம் அல்-குவைன் ஆகிய ஏழு அமீரகங்களைக் கொண்ட ஒரு கூட்டரசாகும். தனி முடியாட்சிகளைக் கொண்ட ஒவ்வொரு அமீரகமும் நடுவண் உச்சப் பேரவி ஒன்றின் மூலம் கூட்டாக நிருவகிக்கப்படுகிறது. ஏழு முடியாட்சிகளில் ஒருவர் அமீரகத்தின் சனாதிபதியாக இருப்பார். அமீரகத்தின் அதிகாரபூர்வ சமயம் இசுலாம் ஆகும், அதிகாரபூர்வ மொழி அரபி (அரபு) ஆகும். ஆனாலும், ஆங்கிலம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
அமீரகத்தின் எண்ணெய் வளம் உலகின் நான்காவது-பெரியதாகும். அதேவேளையில், இதன் இயற்கை வாயு வளம் உலகின் 17-வது பெரியதாகும். அமீரகத்தின் ஆரசுத்தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான காலஞ்சென்ற சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் அமீரகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எண்ணெய் வருவாயை சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு செலவிட்டார். அமீரகத்தின் பொருளாதாரம் வளைகுடா நாடுகளிலேயே அதிகம் பல்வகைப்படுத்தப்பட்டதாக உள்ளது. அதிக மக்கள்தொகையைக் கொண்ட துபாய் நகரம் பன்னாட்டு வணிக, மற்றும் போக்குவரத்துக்கு உகந்த இடமாக மாறியுள்ளது. ஆனாலும், நாட்டின் பொருளாதாரம் அதன் எண்ணெய், இயற்கை வாயு வளத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது.
வரலாறு
ஐக்கிய அரபு அமீரகம் அரபியக் குடாநாட்டில் பாரசீகக் குடாவின் தெற்குக் கரையோரத்திலும், ஓமான் குடாவின் வடமேற்குக் கரைப்பகுதியிலும் இருந்த இனக்குழு அமைப்பைக் கொண்ட சேக்ககங்கள் இணைந்து உருவானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப் பகுதியில் கடலோடிகளான மக்கள் வாழ்ந்து வந்தனர். 7 ஆம் நூற்றாண்டில் இவர்கள் இசுலாம் மதத்தைத் தழுவினர்.
16 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இந்தியப் பெருங்கடல் பகு |
|
சமயம் அல்லது மதம் என்பது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையிலான கோட்பாட்டமைப்புகளில் ஒன்று ஆகும். ஒரு கடவுள் அல்லது கடவுள்கள் மீதான நம்பிக்கையும் அது தொடர்பான செயற்பாடுகளும், சமயச் சடங்குகளும் மதம் குறிக்கிறது.
சமயம் அல்லது மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள் (இறைவன், ஆண்டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள்). இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இந்துக்களின் தொகை
81.3%
80.5%
54%
33.7%
28%
25%
20%
18.2%
15%
12.6%
12%
9.6%
8.1%
6.7%
6.3%
5.1%
3%
2.1%
1.8%
1.69%
கிறித்தவர்களின் தொகை
100%
100% (100% ஏழாம் நாள் வருகை சபை)
~99%
99%
98.3%
98.1% (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்)
98% (96% ரோமன் கத்தோலிக்கம்)
98% (95% கிரேக ஒர்தோடக்ஸ்)
97.2%
97.2%
97% (~97% ரோமன் கத்தோலிக்கம்)
96.9% (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்)
96.5% (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்)
96.4%
96%
~96%
95.1%
94.8%
94.2%
93.5% (பெரும்பாலும் ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை)
93%
முஸ்லிம்களின் தொகை
100 % (90–95% சுன்னி இசுலாம், 5–10% சியா இசுலாம்)
100% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
100% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
99.8% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
99.8% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
~99% (பெரும்பாலும் சுன்னி இசுலாம், 20% சியா இசுலாம்)
99.1% (99.9%) (65–70% சுன்னி இசுலாம், 30–35% சியா இசுலாம்)
98.7% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
98.3% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
98% (பெரும்பாலும் சியா இசுலாம்)
98% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
98% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
97% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
96.6% (99%) (சுன்னி இசுலாம்)
96.4% (85–90% சுன்னி இசுலாம், 10–15% சியா இசுலாம்)
95% (60–65% சியா இசுலாம், 33–40% சுன்னி இசுலாம்)
94% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
93% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
89.4% (சுன்னி இஸ்லாம்)
89.3% (சுன்னி இஸ்லாம்)
பௌத்தர்களின் தொகை
97% (தேரவாதம் – 93%)
96% (மகாயானம் – 36%)
95% (தேரவாதம் – 93%)
93 |
|
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார். பொ.ஊ. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி பொ.ஊ. 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.
இக்கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் இயுனெசுகோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தஞ்சாவூர் அரண்மனை தேவத்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
சொல்லிலக்கணம்
தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயில், பெரிய கோயில், இராசராசேசுவரன் கோயில், இராசராசேச்சரம் என்றும் அழைக்கப்படுகிறது.
முதலாம் இராசராச சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் இராசராசேச்சரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
வரலாறு
முதலாம் இராசராச சோழன் என்றழைக்கப்பட்ட சோழ அரசன் சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்தார். இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராசராச சோழனின் 19 ஆவது |
|
பொழுதுபோக்கு (Leisure) அல்லது ஓய்வு நேரம் என்பது ஒரு நடவடிக்கை அல்லது ஆர்வமாகும். பெரும்பாலும் ஓய்வு நேரத்தில் இன்பத்திற்காக அல்லது ஓய்விற்காக பொழுதுபோக்கு மேற்கொள்ளப்படுகிறது. ஓய்வு நேரம் என்பது வணிகம், வேலை, வேலை தேடுதல், வீட்டு வேலைகள் மற்றும் கல்வி ஆகியவற்றிலிருந்து விலகி, உணவு மற்றும் தூக்கம் போன்ற தேவையான செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்படுவதாகும். இலவச நேரத்தை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் அணுகுமுறைகளின் பன்முகத்தன்மையின் காரணமாக இதை வரையறுப்பது என்பது எளிதானது அல்ல. எடுத்துக்காட்டாக, சமூக சக்திகள் மற்றும் சூழல்கள் குறித்த சமூகவியல் மற்றும் உளவியல் மன மற்றும் உணர்ச்சி நிலைகள் மற்றும் நிலைமைகள் என வெவ்வேறு துறைகள் அவற்றின் பொதுவான பிரச்சினைகளை பிரதிபலிக்கும் வரையறைகளைக் கொண்டுள்ளன. ஒரு ஆராய்ச்சி கண்ணோட்டத்தில், இந்த அணுகுமுறைகள் காலப்போக்கில் அளவிடக்கூடியவை எனவும் மற்றும் ஒப்பிடக்கூடியவை எனவும் உள்ளது.
ஓய்வு நேரப் படிப்புகள் மற்றும் ஓய்வு நேரத்தின் சமூகவியல் ஆகியவை ஓய்வு நேரத்தைப் பற்றிய ஆய்வு மற்றும் பகுப்பாய்வு தொடர்பான கல்வித் துறைகளாகும். ஓய்வு நேரம் என்பது பொழுதுபோக்கிலிருந்து வேறுபடுகிறது. ஏனெனில் இது செயல்பாட்டு சூழல்களில் ஓய்வு நேர அனுபவத்தை உள்ளடக்கிய ஒரு நோக்கமான செயலாகும். ஓய்வுக்காலங்கள் ஊதியத்தைப் போன்ற ஒரு நபருக்கு மதிப்புமிக்கவை என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இல்லையெனில், மக்கள் ஓய்வு எடுப்பதற்கு பதிலாக வேலை செய்திருப்பார்கள். இருப்பினும், ஓய்வு நேரத்திற்கும் தவிர்க்க முடியாத செயல்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாடு கடுமையாக வரையறுக்கப்படவில்லை. எ. கா. மக்கள் சில நேரங்களில் இன்பத்திற்காகவும் நீண்ட கால பயன்பாட்டிற்காகவும் வேலை சார்ந்த பணிகளைச் செய்கிறார்கள்.
ஓய்வு நேரம் என்பது மனித உரிமைகளுக்கான உலக மனித உரிமைகள் சாற்றுரையின் 24 வது பிரிவில் உணரப்பட்டது.
வரலாறு
ஓய்வு என்பது வரலாற்று ரீதியாக உயர் வர்க்கத்தின் சலுகையாகவே இருந்து வருகிறது. ஓய்வு நேரத்திற்கான வாய்ப்புகள் அதிக பணம் அல்லது அமைப்பு மற்றும் குறைந்த வேலை நேரத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை ஓய்வு வியத்தகு முறையில் அதிகரித்து, பெரிய பிரித்தானியாவில் தொடங்கி ஐரோப்பாவின் பிற பணக்கார நாடுகளுக்கு பரவியது. செல்வம் இருந்தபோதிலும் மிகக் க |
|
இந்தப் பக்கங்கள், ஆயிரவாண்டுகளினதும், நூற்றாண்டுகளினதும் போக்குகளைக் கொண்டுள்ளன. தனித்தனி நூற்றாண்டுப் பக்கங்கள், தசாப்தங்களையும், ஆண்டுகளையும் பட்டியலிட்டுள்ளன. வரலாற்று நிகழ்வுகளின் வெவ்வேறு ஒழுங்கமைப்புகளுக்கு வரலாறு பக்கத்தைப் பார்க்கவும்.
முந்திய காலப்பகுதிகளுக்கு cosmological timeline, புவிச்சரிதவியல் நேர அலகு, பரிணாம நேரவரிசை, pleistocene, மற்றும் பழைய கற்காலம் என்பவற்றைப் பார்க்கவும்..
கிமு 10வது ஆயிரவாண்டு
கிமு 9வது ஆயிரவாண்டு
கிமு 8வது ஆயிரவாண்டு
கிமு 7வது ஆயிரவாண்டு
கிமு 6வது ஆயிரவாண்டு
கிமு 5வது ஆயிரவாண்டு
கால வரிசைப்படி வரலாறு
நூற்றாண்டுகள்
பட்டியல்கள் |
|
பொழுதுபோக்குகளின் பட்டியல். பொழுதுபோக்கு என்பது ஓய்வு நேரத்தில் செய்யும் விருப்பமான அல்லது ஆசுவாசப்படுத்தக்கூடிய செயல்பாடாகும்.
பொதுவான ஈடுபாடுகள்
விளையாட்டுக்கள்
கல்வி சார்ந்த ஈடுபாடுகள்
சேகரிப்பு சார்ந்த ஈடுபாடுகள்
உள்புறம்
வெளிப்புறம்
போட்டி சார்ந்த ஈடுபாடுகள்
உள்புறம்
வெளிப்புறம்
கவனிப்பு சார்ந்த ஈடுபாடுகள்
உள்புறம்
வெளிப்புறம்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
பொழுதுபோக்கு
ஈடுபாடுகள் |
|
கிமு 10-ஆம் ஆயிரமாண்டு (10th millennium BC) என்பது கிமு 10000 ஆம் ஆண்டு முதல் 9001 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியைக் குறிக்கும். இவ்வாயிரமாண்டு ஒலோசீன் ஊழியின் முதற் பகுதியாகக் கருதப்படும் இடைக் கற்காலம் மற்றும் எப்பிபெலியோலிதிக்கு (Epipaleolithic) காலங்களின் ஆரம்பக் கட்டமாகும். தென்மேற்கு ஆசியாவில் நெல் மற்றும் சிறுதானியங்களின் அடிப்படை வேளாண்மை தொடங்கிய காலகட்டம். இக்காலகட்டத்தில் வளமான நிலங்களில் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அடுத்த 2,000 ஆண்டுகளுக்கு வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகள் பெரும்போக்காக கடைப்பிடிக்கப்படவில்லை.
உலக மக்கள் தொகை ஒன்று தொடக்கம் பத்து மில்லியன் ஆகக் காணப்பட்டது, இதில் பெரும்பாலானவர்கள் அண்டார்டிக்கா மற்றும் சிலாந்தியா கண்டங்களைத் தவிர மற்றைய கண்டங்களில் உணவுதேடி வேட்டையாடும் சமூகத்தை சார்ந்த குழுக்களாகவே பல இடங்களில் சிதறிக் காணப்பட்டனர். பனிப்பாறையாக்கத்தின் பல பகுதிகள் முடிவுக்கு வந்ததனால், உலகின் வடக்குப் பகுதிகளில் மீள்குடியேற்றம் நிகழத்தொடங்கியது.
நிகழ்வுகள்
கிமு 10,000:மெசொப்பொத்தேமியாவில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் துவங்கியது. லெவண்ட் பகுதியில் நூத்துபியப் பண்பாடு விளங்கியது.
கிமு 10,000: மீசோலிதிக் காலப்பகுதியின் முதலாவது குகைச் சித்திரங்கள் சண்டை மற்றும் சமைய நிகழ்வுகளை சித்தரிக்கும் வண்ணம் வரையப்பட்டது.
கிமு 10,000: சுரைக்காய் பயிரிடப்பட்டு திரவம் கொண்டுசெல்லும் போத்தல்களாக பயன்பட்டது.
கிமு 10,000: இறுதிப் பனிப்பாறையாக்கம் முடிவுக்கு வந்தது.
கிமு 9,700: பெலிஸ்டோசின் சகாப்த்தம் முடிவுக்கு வந்து கோலோசின் சகாப்தம் தொடங்கியது.
கிமு 9,700: அறுவடை செய்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. விவசாய அறுவடை என்று கருதவேண்டியதில்லை. காட்டுப்புற்கள் அனத்தோலியா என்கிற பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்டிருக்கலாம்.
கிமு 9,500: கொபெக்லி தேபே என்கிற ஆலையத்தொகுதி கட்டுமானம் செய்யப்பட்டது.
கிமு 9,300: அத்திமரப் பழங்கள் ஜோர்டான் ஆற்றுப் பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்டன.
கிமு 9,100: நாமறிந்த மிகப்பழைய பெரும்கற்கள் கொபெக்லி தேபே ஆலையத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டன. சில பெரும்கற்களின் எடை 20 தொன்.
கிமு 9,000: புதிய கற்கால கலாச்சாரம் பழைய அண்மைய கிழக்கில் உதயமாகியது.
மேற்கோள்கள்
துணை நூல்கள்
(2006a): "Early Domesticated Fi |
|
கிமு 9-ஆம் ஆயிரமாண்டு (9th millennium BC) என்பது கிமு 9000 ஆம் ஆண்டு முதல் கிமு 8001 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியைக் குறிக்கும். இது புதிய கற்காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
வளமான நிலமெங்கும் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது. மட்பாண்ட வகைகள் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டன. எரிக்கோ போன்ற பெரும் குடியேற்றங்கள் உப்பு, தீக்கல் வணிக வழியே உருவாக்கப்பட்டன. கடைசிப் பனியாற்றுக் காலத்தின் பனியாறுகள் குறைவடைந்ததை அடுத்து ஐரோவாசியா மீள்குடியேற்றம் இடம்பெற்றது. உலக மக்கள் தொகை ஏறத்தாழ ஐந்து மில்லியனுக்குக் குறைவாக இருந்தது.
நிகழ்வுகள்
சில விலங்குகள் வளர்ப்பு விலங்குகளாக வீடுகளில் வளர்க்கப்பட்டன.
மெசொப்பொத்தேமியாவில் பயிர்த்தொழில், வேளாண்மை (விவசாயம்) துவக்கம்.
அம்பு, வில் கண்டுபிடிப்பு.
சப்பானில் மிகப் பழைய மட்பாண்டம் செய்யப்பட்டது.
எரிக்கோவில் புதிய கற்காலக் குடியேற்றம். கிமு 8350.
நோர்வேயின் எய்க்கர் கிமு 8000 அளவில் குடியேறியிருந்தார்கள்.
நாடோடி வேடர்கள் இங்கிலாந்து வந்தனர் கிமு 8300.
ஆயிரமாண்டுகள் |
|
நிகழ்வுகள்
கி.மு. 8000-இல் பனியுகம் முடிவுற்றது.
கட்டல்ஹோயுக், கிமு 7500ல் தொடங்கப்பட்டது.
உருளைக்கிழங்கு, அவரை என்பன தென் அமெரிக்காவில் பயிரிடப்பட்டன.
கிழக்காசியாவில் அரிசி பயிரிடலின் தொடக்கம்.
தென்மேற்கு ஆசியாவில் செம்மறி ஆடு வளர்ப்பு
துணை நூல்கள்
வெளி இணைப்புகள் |
|
நிகழ்வுகள்:
மெசொப்பொத்தேமியாவில் கிமு 6500-இல் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் முடிவடைந்தது.
மட்பாண்ட புதிய கற்காலத்தில் மெசொப்பொத்தேமியாவில் ஹலாப் பண்பாடு, அசுன்னா பண்பாடு., சமார்ரா பண்பாடு, உபைதுகள் காலம், ஹலாப் பண்பாடுகள் நிலவியது.
தென்னாசியாவிலுள்ள மெஹெர்கரில் விவசாயமும், குடியேற்றமும், கிமு 7000.
விவசாயம், ஐரோப்பாவில் தோற்றம். (கிரீஸ், இத்தாலி )
மந்தை மேய்ப்பும், தானியங்கள் பயிர்ச் செய்கையும். (கிழக்கு சகாரா)
மெசொப்பொத்தேமியாவில் முதலாவது மட்பாண்டம்.
பொன்னும், இயற்கையாகக் கிடைக்கும் செப்பும் பயன்படத் தொடங்கின.
ஆங்கிலக் கால்வாய் உருவானது. கிமு 6500.
துணை நூல்கள்
வெளி இணைப்புகள்
ஆயிரமாண்டுகள் |
|
நிகழ்வுகள்
மெசொப்பொத்தேமியாவில் நீர்ப்பாசனம். ( கிமு 55வது நூற்றாண்டு)
தென்னாசியாவில் மெஹர்கரில் மட்பாண்டம் கிமு 5500.
நைல் பள்ளத்தாக்கில் வேளாண்மை, பயிர்த்தொழிலின் தோற்றம்.
ஆசியாவில் அரிசி பயிரிடப்பட்டது.
சில்லு, ஏர் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.
வைன் முதன்முதலாக பெர்சியாவில் உற்பத்தி செய்யப்பட்டது.
தெற்கு மெசொப்பொத்தேமியாவில் கோவில்கள் கட்டப்பட்டன (கிமு 52வது நூற்றாண்டு)
கருங்கடல் உப்பு நீரால் நிரம்பியது. கிமு 5600.
செப்டெம்பர் 1, கிமு 5509 - இந்த நாளையே பைசன்டைன் பேரரசு உலகம் படைக்கப்பட்ட நாளாக எடுத்துத் தங்கள் கால அட்டவணையின் தொடக்கமாகக் கொண்டார்கள்.
பார்க்க: படைப்புநாள் பற்றிய மதிப்பீடுகள்.
துணை நூல்கள்
வெளி இணைப்புகள் |
|
நிகழ்வுகள்:
நைல்பிரதேசத்தில், மெரிம்டே நாகரிகம், கிமு 4750 - 4250.
மெசொப்பொத்தேமியாவில் சூசா மற்றும் கிஷ் நாகரிகங்கள் (கிமு 4500)
நைல் பிரதேசத்தில் பதரி பண்பாடு, கிமு 4400 - 4000.
குறிப்பிடத் தக்கவர்கள்:
புத்தாக்கங்கள், கண்டுபிடிப்புகள், அறிமுகங்கள்
ஐரோப்பாவில் ஏரின் (கலப்பை) அறிமுகம் (கிமு 4500)
எழுத்தின் அறிமுகம்.
துணை நூல்கள்
வெளி இணைப்புகள் |
|
அஞ்சல்தலை சேகரிப்பு என்பது அஞ்சல்தலைகளையும், அதனுடன் தொடர்புடைய வேறு பொருட்களையும் சேகரித்தல் என்று பொருள்படும். இது உலகின் மிகப் பரலமான பொழுது போக்குகளில் ஒன்று. உலக அளவில் பரவி இருந்தும், பெரும்பாலானோருக்கு இது ஒரு இலாபமில்லாத முயற்சியாகவே இருந்து வருகிறது. எனினும், சில சிறிய நாடுகள், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட, சிறுதொகையான அஞ்சல்தலைகளை, அஞ்சல்தலை சேகரிப்பாளர்களைக் கருத்தில் கொண்டு மட்டுமே வெளியிட்டு வருமானம் பெறுகின்றன. இந்நாடுகள் வெளியிடும் அஞ்சல் தலைகள் அவற்றின் அஞ்சல் துறைத் தேவைகளிலும் அதிகமாகவே இருக்கும்.
அஞ்சல்தலை சேகரிப்பின் வரலாறு
பென்னி பிளாக் (Penny Black) என்று அழைக்கப்படும், முதலாவது அஞ்சல்தலை, 1840இல் பெரிய பிரித்தானியாவில் வெளியிடப்பட்டது. இளம் அரசி விக்டோரியாவின் படத்தைத் தாங்கியிருந்த இது, துளைகளில்லாமல் வெளியிடப்பட்டதனால் பயன்படுத்தும்போது கத்தரிக்கோல்களினால் வெட்டிப் பிரிக்கப்படவேண்டியிருந்தது. பயன்படுத்தப்படாத 'பென்னி பிளாக்' அஞ்சல்தலைகள், கிடைத்தற்கரிதாயிருக்கின்ற அதேவேளை, பயன்படுத்தப்பட்டவை பொதுவாகக் கிடக்கின்றன. இவற்றை $25 முதல் $150 வரை அவற்றின் நிலையைப் பொறுத்து வாங்கலாம்.
1960களிலும், 1970களிலும், பொதுவாகச் சிறுவர்களும், இளவயதினருமே தொடக்ககாலச் சேகரிப்பாளர்களாக இருந்தார்கள். பெரியவர்கள் பலர் இதையொரு சிறுவர் செய்யும் செயலாகக் கருதி ஒதுக்கினார்கள். 1800களின் இறுதிப் பகுதியில், இவ்வாறான சேகரிப்பாளர்கள் பெரியவர்களாகி, அஞ்சல்தலைகள், அவற்றின் உற்பத்தி, அஞ்சல்தலையில் அச்சுப் பிழைகள் போன்றவை தொடர்பாக முறையாக ஆராய்ந்து வெளியிட்டார்கள்.
அரிய அஞ்சல்தலைகளுக்குப் கிடைத்த பிரபலம் பலருக்குத் தூண்டுதலாக அமைந்து, 1920களில், சேகரிப்பாளர்களது தொகை விரைவாக அதிகரித்தது. முந்திய அஞ்சல்தலைகள் நல்ல நிலையில் கிடைக்காததால், அவற்றின் பெறுமதியும் பெருமளவு கூடியது. பொதுவாக இரண்டு, மூன்று, நான்கு என்று சேர்ந்து இருந்த பழைய அஞ்சல்தலைகள் கிடைத்தற்கு அரிதாயிருந்தன.
1920களில் வெளியிடப்பட்ட அமெரிக்கத் அஞ்சல்தலைகளின் பெறுமதி கிடுகிடுவென உயர்ந்ததால், 1930களில், பல அமெரிக்கச் சேகரிப்பாளர்கள், சில ஆண்டுகளின் பின்னர் நல்ல விலைக்கு விற்கும் எண்ணத்துடன், புத்தம்புதிய அஞ்சல்தலைகளை வாங்கிக் குவித்தனர். இவ்வெண்ணம் ஈடேறவில்லை. 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இப்பொழுதுகூட, புத்தம்புத |
|
அஞ்சற்றலை அல்லது தபால்தலை என்பது அஞ்சல் சேவைக்கு முன் கட்டணம் செலுத்தப்பட்டதற்குச் சான்றாக கொடுக்கப்படுவது. பொதுவாக இது ஒரு நீள்சதுர வடிவிலமைந்த சிறு காகிதத் துண்டாக இருக்கும். தபால் சேவை மூலம் அனுப்பப்படவுள்ள கடிதஉறையில், மேற்சொன்ன தபால்தலைகளை ஒட்டுவதன் மூலம், அக் கடிதத்தை அனுப்புபவர் அதை அனுப்புவதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார் என்பதற்குச் சான்று அளிக்கின்றார். முன் கட்டணம் செலுத்தப்பட்ட உறைகளைப் பயன்படுத்துவதிலும் பார்க்க அதிகம் விரும்பப்படும் முறை இதுவாகும்.
அஞ்சல்தலை என்ற சொல்லுக்குப் பதிலாக முத்திரை என்ற பதமும் வழக்கிலுள்ளது. இச் சொல் தபால்தலை என்பதை மட்டுமன்றி வேறு பொருள்களையும் கொடுக்கக் கூடுமெனினும், சாதாரணமாக முத்திரை என்பது, தபால் தலையையே குறிக்கும்.
நீள் சதுரமாக மட்டுமன்றித் தபால்தலைகள் பல்வேறு வடிவங்களிலும் வெளியிடப்படுவதுண்டு. முக்கோணம், வட்டம், பல்கோணம், இணைகரம் போன்ற வடிவங்களிலும் தபால்தலைகள் உண்டு.
வரலாறு
ஒட்டும் தன்மையுள்ள தபால்தலைகளும், ஒருதன்மைத்தான தபால் கட்டணமும், 'ஜேம்ஸ் சாமேர்ஸ்' என்பவரால் 1834 அளவில் முன்வைக்கப்பட்டது. இதே கருத்தை 1837ல் 'ரோலண்ட் ஹில்' என்பவரால் வெளியிடப்பட்ட, தபால் துறைச் சீரமைப்பு: இதன் முக்கியத்துவமும், செயற்படுதன்மையும் என்னும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. தபால் பெறுனர், கட்டணம் செலுத்தவிரும்பாவிடில், தபாலை வாங்க மறுக்கலாம் எனவே தபால் கட்டணத்தை, பெறுனரிடம் அறவிடுவதிலும், அனுப்புனரிடம் அறவிடுவதே சிறந்தது என அதில் அவர் வாதாடினார். எவ்வளவு தூரத்தில் வழங்கப்படுகிறது என்பதைக் கருதாமல், ஒருசீரான கட்டணமாக ஒரு பென்னியை அறவிடவேண்டுமென்றும் அவர் கருத்து கூறினார். வெவ்வேறு தொலைவிடங்களுக்கு வெவ்வேறு கட்டண அறவீட்டு முறை, கணக்கு வைக்கும் செலவை அதிகரிக்கும் என்றும், ஒரு சீரான கட்டணமுறையில் அரச தபால் சேவைக்குப் பணம் மிச்சப்படும் என்பதையும் எடுத்துக் காட்டினார். சாமேர்ஸின் முன்வைப்பு இறுதியாக 1839 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பொதுத் தபால் அலுவலகம், 1840ல் பென்னி தபால் சேவையை ஆரம்பித்ததுடன், 1 பென்னியும், 2 பென்னியும் பெறுமானமுள்ள, படம் அச்சிடப்பட்ட உறைகளையும் வெளியிட்டது.
மூன்று மாதங்களின் பின்னர், விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்ட பென்னி பிளாக் என்று அறியப்பட்ட முன்கட்டணத் தபால் தலையையும் வெளிய |
|
பென்னி பிளாக் (Penny Black) உலகின் முதலாவது உத்தியோகபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலையாகும். இது பெரிய பிரித்தானியாவால் 1840 மே 1 அன்று மே 6ம் திகதியிலிருந்து உபயோகிப்பதற்காக வெளியிடப்பட்டது.
தபால் சேவைக்காக முன்கட்டணம் செலுத்தப்பட்டதைக் காட்ட, ஒட்டக்கூடிய தபால்தலையைப் பயன்படுத்தும் எண்ணம், ரோலண்ட் ஹில் என்பவரது, பிரித்தானிய தபால் முறைமையின் மறுசீரமைப்புக்கான 1837 ஆம் வருடத்திய முன்வைப்பின் ஒரு பகுதியாகும். 1839ல், பிரித்தானியத் திறைசேரி, புதிய தபால்தலை வடிவமைப்புக்காகப் போட்டியொன்றை அறிவித்ததாயினும், சமர்ப்பிக்கப்பட்ட வடிவமைப்புகள் எதுவும் ஏற்கப்படவில்லை. அதனால், முன்னர் ஒரு பதக்கத்துக்காக வில்லியம் வயன் என்பவரால் உருவாக்கப்பட்ட விக்டோரியா மகாராணியின் உருவப்படமொன்றைப் பயன்படுத்தத் திறைசேரி முடிவுசெய்தது. மேல்பகுதியில் "POSTAGE" என்ற சொல்லும், அடியில் "ONE PENNY" என்ற பெறுமானமும் அச்சிடப்பட்டிருந்தது. இவற்றுடன் அடிப்பக்கத்து இரண்டு மூலைகளிலும், பெரிய தாளில், குறிப்பிட்ட தபால்தலையின் இடத்தைக் குறிக்கும், "A A", "A B", போன்ற எழுத்துக்கள் இருந்தன. அதன் பெயர் குறிப்பதுபோல், தபால்தலை முழுவதும் கறுப்பு நிறத்திலேயே அச்சிடப்பட்டிருந்தது. தபால்தலைகள் பேர்க்கின்ஸ் பேக்கன் (Perkins Bacon) நிறுவனத்தால் அச்சிடப்பட்டது. At the time it was normal for the recipient to pay postage on delivery, charged by the sheet and on distance travelled. By contrast, the Penny Black allowed letters of up to to be delivered at a flat rate of one penny, regardless of distance.
மே 6 உத்தியோகபூர்வமான முதல் நாளாக இருப்பினும், மே 2ல் தபால்குறியிடப்பட்ட மூன்று உறைகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. இது தபாலதிபர்கள் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே தபால்தலைகளை விற்றதன் காரணமாக இருக்கலாம்.
பென்னி பிளாக், ஒரு வருடத்துக்கும் சற்றுக் கூடியகாலமே உபயோகத்தில் இருந்தது. கறுப்பு நிறத்தின் மேல் சிவப்பு நிற மையினால் அடித்தல் செய்தால்கூடத் தெளிவாகத் தெரிவதில்லை என்ற அனுபவத்தின் காரணமாக, பென்னி ரெட் என்னும் சிவப்பு நிறத் தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டு, கறுப்பு மையினால் அடித்தல் செய்யப்பட்டது.
பென்னி பிளாக் தாராளமாகக் கிடைக்கக்கூடியதெனினும், அதனுடைய முக்கியத்துவம் காரணமாக அதற்கு சேகரிப்பாளரிடையே அதிக மதிப்பு உள்ளதால், மலிவா |
|
தமிழர் (, Tamils, Tamilians) என்பவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாவர். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். 1800 முதல் 1900-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள், மேலும் மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆப்பிரிக்கா நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950-ஆம் ஆண்டுக்குப் பின்னர்த் தமிழர் தொழில் வல்லுநர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்ட பெருமளவு ஈழத்தமிழர்கள் ஆத்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, செருமனி, சுவிட்சர்லாந்து, தென்மார்க்கு, நோர்வே ஆகிய நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகக் கொண்டுள்ளனர்.
வரலாறு
தமிழர் தோற்றம் பற்றி 4 கருதுகோள்கள் உள்ளன. தமிழர் குமரிக்கண்டத்தில் இருந்து வந்தார்கள் என்பது ஒரு கருதுகோள். பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது இன்னொரு கருதுகோள். மூன்றாவது கருதுகோள் தமிழர்கள் ஆதியில் ஆப்பிரிக்காவில் இருந்து அரேபிய கடல் ஊடாகத் தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே என்கிறது. தமிழர் நடு ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படியாயினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்றாகும்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், குறிப்பாக ஆதிச்ச நல்லூரில், நடந்த அகழ்வாராய்ச்சியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புதையுண்ட மண்பாண்டங்கள் கிமு 1000-ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தவைகளாகும். இவை தமிழர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றாக விளங்குகின்றன. அப்புதைபொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகள |
|
திராவிட மொழிகள் (Dravidian languages) பெரும்பாலும் தென்னாசியாவில் பேசப்படும் 86 மொழிகளை உள்ளடக்கிய ஒரு மொழிக் குடும்பமாகும். இம்மொழிகளை 215 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசுகின்றனர். இவை தெற்கு, தென்-மத்தி, மத்தி, வடக்கு என நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியன இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்நான்கு மொழிகளும் முறையே தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் அலுவல் மொழிகளாகத் திகழ்கின்றன.
தென்னிந்திய மொழிகள்பற்றி ஆராய்ந்து, 'திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஓர் ஒப்பிலக்கணம்' என்ற நூலை 1856-இல் எழுதிய இராபர்ட்டு கால்டுவெல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த வேறு சில மொழிகளையும் சேர்த்து, அவற்றைச் சுட்டுவதற்காகத் 'திராவிட' என்ற சொல்லை உருவாக்கினார். பின்னர் வந்த ஆய்வாளர்கள், திராவிட மொழிகளைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட இந்தியா, பாகித்தானிலுள்ள பலூச்சித்தான், நேபாளம் ஆகிய இடங்களில் வழங்கி வருவதை எடுத்துக்காட்டினர்.
வரலாறு
பொ.ஊ.மு. 1500 அளவில், ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், இந்தியா முழுவதும் திராவிட மொழிகளே வழங்கி வந்தன என்பது பல ஆய்வாளர்களது கருத்து. திராவிட மொழிகளில் இருந்து இந்திய ஆரிய மொழிகளுக்குச் சென்றிருக்கும் நாமடங்கு ஒலியன்கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரசுவதி -
சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் திராவிட நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அரப்பா, மொகஞ்சதாரோ முதலிய சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய திராவிட மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. ஆனால் , பல ஆய்வாளர்கள் அக்கருத்தை மறுத்தும் வருகிறார்கள். சிந்துவெளிக் குறியீடுகள் எந்த மொழிக்கு உரியவை என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:
தென் திராவிடம்
தென்-நடுத் திராவிடம் |
|
இது நாடு வாரியாக நகரங்களின் பட்டியலைத் தரும் பட்டியலாகும்
நாடுகள் தொடர்பான பட்டியல்கள் |
|
மாநிலத் தலைநகர்கள்
நகர இணைவுகள்
{| class="wikitable"
|- bgcolor="#CCCCCF" align="center"
|பெயர்||மக்கள்தொகை||மாநிலம்
|-
|பெரிய மும்பாய் ||11,914,398 ||மகாராஷ்டிரம்
|-
|டில்லி மாநகரக் கார்ப்பொரேஷன் || 9,817,439 ||
|-
|கொல்கத்தா||4,580,544|| மேற்கு வங்காளம்
|-
|பெங்களூர்||4,292,223||கர்நாடகம்
|-
|சென்னை||4,681,087||தமிழ்நாடு
|-
|அகமதாபாத்||3,515,361||குஜராத்
|-
|ஹைதராபாத்||3,449,878||ஆந்திரப் பிரதேசம்
|-
|புனே||2,540,069</td>மகாராஷ்டிரம்
|-
|கான்பூர் ||2,532,138 ||---
|-
|சூரத்||2,433,787||---
|-
|ஜெய்ப்பூர்||2,324,319||---
|-
|நாக்பூர்||2,051,320 ||---
|-
|இந்தோர்||1,597,441||---
|-
|போபால்||1,433,875||---
|-
|லூதியானா||1,395,053||பஞ்சாப்
|-
|பாட்னா||1,376,950||பீகார்
|-
|வடோதரா||1,306,035||---
|-
|தானே||1,261,517||---
|-
|ஆக்ரா||1,259,979||டெல்லி
|-
|கல்யாண்-டொம்பிவலி||---||---
|-
|வாரணாசி||1,100,748||---
|-
|நாசிக்||1,076,967||---
|-
|மீரட்||1,074,229||---
|-
|பரீதாபாத்||1,054,981||---
|-
|ஹவுரா||1,008,704||---
|-
|பிம்பிரி-சிஞ்ச்வடு||1,006,417 ||---
|}
மேற்கோள்கள்
இந்தியப் புவியியல்
பட்டியல்கள் |
|
இலங்கையிலுள்ள எல்லா நகரங்களுமே, உலக மட்டத்தில் நோக்கும் போது மிகச் சிறியனவாகும். தலைநகரான கொழும்பின் மக்கள் தொகை, அண்ணளவாக 6 இலட்சம் ஆகும். ஏனைய நகரங்கள் அனைத்தும் 2 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையே கொண்டுள்ளன. எனினும் இலங்கையில் நகரப்பகுதிகளின் பகுப்பு முறைகளின்படி, மாநகரசபைகளினால் (Municipality) நிர்வகிக்கப்படுகின்ற நகரங்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
இலங்கையின் மாகாண சபைகள்
உசாத்துணை
இலங்கை தொடர்பான பட்டியல்கள் |
|
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒவ்வொரு அமீரகத்திலும் ஒன்றிரண்டு நகரங்களே உள்ளன. அமீரகங்களும் அவற்றின் தலைநகரங்களும் ஒரே பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இந் நகரங்கள் மாநகரசபைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றுள் அபுதாபி முழுநாட்டினதும் தலைநகரமாக உள்ளது. துபாய் நகரம், வர்த்தக ரீதியில் முதன்மை பெற்ற நகரமாக விளங்குகிறது. கீழேயுள்ள பட்டியலில் அல் எயின் தவிர்ந்த எல்லா நகரங்களும் கடற்கரை நகரங்களாகும். அல் எயின் நகரம் அபுதாபி அமீரகத்தின் ஒரு பகுதியாகும்.
கீழே தரப்பட்டுள்ள எல்லா நகரங்களும் ஒரே தரத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், முதல் நான்கும் தவிர்ந்த ஏனையவை ஒப்பீட்டளவில் மிகவும் சிறியவை ஆகும்.
அபுதாபி
அல் எயின்
துபாய்
சார்ஜா
அஜ்மான்
உம் அல் குவெய்ன்
ராஸ் அல் கைமா
புஜேரா
இவற்றையும் பார்க்கவும்
நாடுகள் வாரியாக மாநகரங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
ஐக்கிய அரபு அமீரகம் |
|
சார்ஜா என்ற பெயர், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மூன்றாவது பெரிய அமீரகத்தையும், அதன் தலைநகரத்தையும் குறிக்கும்.
சார்ஜா அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் நாட்டின் கிழக்கு, மேற்கு இரண்டு கரைகளையும், அதாவது ஒரு பக்கம் பாரசீக வளைகுடாவையும், மறுபக்கம் இந்து சமுத்திரத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும் ஒரே அமீரகம் இதுவாகும். இது மேற்குக் கரையில் சார்ஜா மாநகரத்தையும், அதை அண்டியபகுதிகளையும், கிழக்குக் கரையில், கோர்பக்கான், திப்பா, --- ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. தெற்கே துபாய் அமீரகமும், வடக்கே அஜ்மான் அமீரகமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கே, உம் அல்-குவைன், ராஸ் அல் கைமா, புஜேரா ஆகிய அமீரகங்களைத் தொட்டுச் செல்லும் இதன் எல்லையில் ஓமான் நாடும் உள்ளது.
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
பாம் தீவுகள்
பூர்ஜ் அல் அராப்
துபை மெட்ரோ
புர்ஜ் கலீஃபா
கல்ப் நியூஸ்
ஆசிய நகரங்கள்
ஐக்கிய அரபு அமீரகம் |
|
விண்வெளி என்பது ஒப்பீட்டளவில், கோள்களின் காற்று மண்டலத்துக்கு வெளியேயுள்ள, பிரபஞ்சத்தின் வெறுமையான பகுதியாகும். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 100 கி.மீற்றருக்கு மேலே ஆரம்பமாவதாகக் கொள்ளலாம்.
விண்வெளி அறிவியல், அல்லது விண்வெளி அறிவியல்கள், பின்வருவன போன்ற பல்வேறு துறைகளை அடக்கியுள்ளது.
வானியலும், வான்பௌதீகவியலும்
Exobiology- புறவெளி உயிரியல்
நுண்ணீர்ப்புச் சூழல் (Microgravity environment)
பிளாஸ்மா பௌதீகவியல்
விண்வெளிப் போக்குவரத்து
ஏவுகணை உந்துகை (Rocket propulsion)
ஏவுகணை ஏவுதற் தொழில்நுட்பம்
கோள்களிடைப் பயணம்
நட்சத்திரங்களிடைப் பயணம் (Interstellar travel)
விண்கல உந்துகை (Spacecraft propulsion)
விண்வெளிப் பயணம் (Space exploration)
ஆளில்லா விண்வெளித் திட்டங்கள் (Unmanned space missions)
ஆட்களுடனான விண்வெளித் திட்டங்கள் (Manned space missions)
விண்வெளிக் குடியேற்றம்
இவற்றுடன், விண்வெளி அறிவியல்கள், விண்வெளிச் சூழலிலுள்ள நுண்ணுயி உயிரியலிலிருந்து, மற்றைய கோள்களினதும், விண்பொருட்களினதும் புவிச்சரிதவியல் வரையும்,அதுபோல், நட்சத்திரங்களிடை வெளிகளிலும், நட்சத்திரங்களுள்ளேயும் அணுப் பௌதீகவியலும் போன்ற, வேறு பல துறைகள்மீது தாக்கங் கொண்டோ அல்லது அவற்றுடன் தொடர்புபட்டோ உள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
செய்மதி
மேற்கோள்கள் |
|
அப்பல்லோ திட்டம் என்பது 1961–1972 வரை, ஐக்கிய அமெரிக்க நாட்டினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளிப்பறப்புத் திட்டமாகும். இது, தசாப்தம் 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கி, பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் அடையப்பட்டது. சந்திரனில், ஆரம்ப ஆள்மூல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது.
அறிமுகம்
மேர்க்குரித் திட்டம், ஜெமினி திட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, அப்பல்லோ திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது ஆளேற்றிய விண்பறப்புத் திட்டமாகும். அப்பல்லோ, டுவைட் டி. ஐசனாவர் நிர்வாகத்தில், மேர்க்குரித் திட்டத்தின் தொடர்ச்சியாக, உயர்நிலை பூமிச்சுற்று ஆய்வுகளுக்காக, உருக்கொடுக்கப்பட்டது. பின்னர், மே 25, 1961ல், அமெரிக்கக் காங்கிரசின் விசேட கூட்டு அமர்வில், ஜனாதிபதி கெனடியால் அறிவிக்கப்பட்டபடி, தீவிர நிலவில் இறங்கும் நோக்கத்துக்காக மாற்றியமைக்கப்பட்டது.
ஒரு திட்ட முறையைத் தெரிவுசெய்தல்
சந்திரனை இலக்காகத் தீர்மானித்ததன் பின்னர், மனித உயிருக்கான ஆபத்து, செலவு, தொழில்நுட்பம், விமானிகள் திறமை ஆகிய தேவைகளின் குறைந்த அளவு உபயோகத்துடன், கெனடி அறிவித்த நோக்கங்களை அடைவதற்காகப் பறப்புத் திட்டங்களை வடிவமைப்பதில், அப்பல்லோ திட்டத்தின் திட்டமிடலாளர்கள் பெரும் சவாலை எதிர்நோக்கினார்கள்.
மூன்று திட்டங்கள் கருத்திலெடுக்கப்பட்டன. முதலாவதாக, விண்கலத்தை நேரடியாகச் சந்திரனுக்கு ஏற்றுதல். இதற்குத் தற்போது திட்டமிடப்பட்டிருப்பனவற்றிலும் பார்க்கச் சக்தி கூடிய நோவா தூக்கி வேண்டியிருக்கும். இரண்டாவது, பூமிச் சுற்றுப்பாதை திட்டமிட்ட சந்திப்பு (EOR) என அழைக்கப்பட்டது. இதன்படி, ஒன்றில் விண்கலத்தையும், மற்றதில் எரிபொருளையும் வைத்து, இரண்டு சனி 5 (Saturn V) ராக்கெட்டுகள் ஏவப்பட வேண்டும். விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் தரித்து நிற்க, நிலவுக்குச் சென்று திரும்பிவரப் போதுமான அளவு அதற்கு எரிபொருள் நிரப்பப்பட வேண்டும்.
சந்திரச் சுற்றுப்பாதை திட்டமிட்ட சந்திப்பு
உண்மையாகக் கடைப் பிடிக்கப்பட்ட திட்டத்தின் உருவாக்குனர், ஜோன் ஹூபோல்ட் என்பவராவர். இத்திட்டம் 'சந்திரச் சுற்றுப்பாதை திட்டமிட்ட சந்திப்பு' (LOR) என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியது. விண |
|
அப்பல்லோ 11 (Apollo 11) என்பது சந்திரனிலிறங்கிய முதல் ஆளேற்றிய பயணத் திட்டமாகும். இது அப்பல்லோ திட்டத்தின் 5 ஆவது ஆளேற்றிய பயணத் திட்டமாகும். இது ஜூலை 16, 1969இல் 39ஏ ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. ஜூலை 24, 1969ல் இது திரும்பியது. இத்திட்டத்தில் கட்டளை அலுவலராக நீல் ஆம்ஸ்ட்ரோங்கும், கட்டளைக் கூறு விமானியாக மைக்கேல் கொலின்சும், சந்திரக் கூறு விமானியாக எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர்.
கட்டளைக்கூறு: கொலம்பியா
சந்திரக் கூறு: ஈகிள்
இறக்கம்: ஜூலை 20, 1969
சந்திரனில் இறங்கிய இடம்: 1.1 வ, 23.8 கி -- அமைதிக் கடல் (Mare Tranquillitatis)
பரப்பின் மேல்: 21.6 மணிகள்
லூனார் EVA: 2.5 மணிகள்
Samples: 22 கிகி
ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்த முதல் மனிதராவார். அல்ட்ரின் அவருக்கு அடுத்தவராவார். கொலின்ஸ், நிலவின் மேல் சுற்றுப்பாதையிலேயே இருந்தார்.
பயணத்திட்டக் குறிப்புகள்
ஜுலை 20ல், சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, "ஈகிள்" என்று பெயர் கொண்ட சந்திரக் கூறு, "கொலம்பியா"விலிருந்து பிரிந்தது. கொலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க, ஆம்ஸ்ட்ரோங்கையும், அல்ட்ரினும் ஈகிளுடன் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கினர்.
சந்திர மேற்பரப்பை நோக்கி இறங்கும் போது, கண்காணிப்புப் புகைப்படங்களில் காணப்பட்டதுபோலன்றி, இறங்க உத்தேசித்திருந்த இடம் எதிர்பார்த்ததிலும் கூடிய பாறைப் பிரதேசமாய் இருந்ததை, விண்வெளிவீரர்கள் அவதானித்தனர். ஆம்ஸ்ட்ரோங், இக்கட்டத்தில், ஆளியக்கக் கட்டுப்பாட்டைக் கையாண்டு, மட்டமான நிலப்பகுதியொன்றில் இறங்குவதற்கு வழிகாட்டினார். இப் பிரதேசம் பின்னர் "அமைதித் தளம்" (Tranquility Base) என அழைக்கப்பட்டது.
இறக்கத்தின் பின் ஆறரை மணி நேரம் கழிந்தபின், ஆம்ஸ்ட்ரோங், சந்திர மேற்பரப்பில் இறங்கி, அந்தப் பிரபலமான அறிக்கையை விடுத்தார்; "இது [ஒரு] மனிதனைப் பொறுத்தவரை, சிறிய காலடி, ஆனால் மனித இனத்துக்கு இது பாரிய பாய்ச்சலாகும்." (அவர் பேசும்போது, "ஒரு" என்ற சொல் விடுபட்டு, பொருள் மாற்றம் ஏற்பட்டுவிட்டாலும், சில வரலாற்றாசிரியர்கள், தாராள மனப்பாண்மையுடன், இது ஆம்ஸ்ட்ரோங்கின் தவறு என்பதிலும், தொலைத் தொடர்புக் கோளாறு என்றே கூறுகின்றனர்.)
21 மணி 36 நிமிடங்களின் பின்னர், ஈகிள் தனது ஏறும் இயந்திரத்தை இயக்கி, மீளும் கொலம்பியாவுடன் இணைந்தது. விண்வெளிவீரர்கள் ஜூலை 24ல், பூமிக்குத் திரும்பியபோது, பெரும் வீரர்களாக வரவேற்கப் |
|
விண்வெளி நிலையம் (Space station) என்பது விண்ணில் மனிதர் வாழ்வதற்கென வடிவமைக்கப்பட்டு, மனிதனால் செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். விண்வெளி நிலையம், பெரிய அளவில் உந்தல் அல்லது இறங்கல் வசதிகளைக் கொண்டிராமையை வைத்து, ஏனைய ஆளேற்றிய விண்கலங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகிறது - பதிலாக, விண்வெளி நிலையத்திலிருந்து போக்குவரத்துக்கு ஏனைய வாகனங்கள் பயன்படுகின்றன. விண்வெளி நிலையங்கள், சுற்றுப்பாதையில், சில மாதங்களைக்கொண்ட இடைத்தரக் கால அளவு வாழ்க்கைக்காக வடிவமைப்புச் செய்யப்படுகின்றன.
கடந்தகால, நிகழ்கால விண்வெளி நிலையங்கள்:
சல்யூட்
ஸ்கைலாப்
மிர்
அனைத்துலக விண்வெளி நிலையம் (ISS)
சில விண்வெளி நிலைய வடிவமைப்புகள், கூடிய அளவு மக்களுக்காக, நீண்ட கால விண்வெளி வாழிட நோக்கங்களைக் கருத்திற்கொண்டு முன்மொழியப் பட்டுள்ளன. முக்கியமாக இவை, மக்கள் வீடுகள் கட்டிக்கொள்ளக் கூடிய "விண்வெளி நகரங்களாகும்". இம் முன்மொழிவுகள், செயல்படுத்தும் நோக்கத்துக்காகத் தீவிர கவனத்துக்கு உட்படவில்லை.
மேற்கோள்கள்
மாந்த வாழிடங்கள் |
End of preview. Expand
in Data Studio
README.md exists but content is empty.
- Downloads last month
- 2